Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 25, 2026
வினாயகர் அகவல் – தத்துவ விளக்கம் –
வினாயகர் அகவல் – தத்துவ விளக்கம் – Experiences decoded
BG Venkatesh / October 26, 2017
வினாயகர் அகவல் – தத்துவ விளக்கம் –
Done to the extent I can understand and I know
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
கருத்து : வினாயகர் பெருமான் ” தன் மேல் திருவடி வைத்து அருள் செய்ததாக ” கூறுகின்றார்
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
கருத்து : “ திருவடிகள் கொண்டு ஐம்புலங்களை அடக்கும் வழி தெரிவித்ததாக கூறுகின்றார் பாட்டி “
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
கருத்து : கருவிகள் – 36
ஆன்ம தத்துவங்கள் -24
வித்தியா தத்துவங்கள் – 7
இவைகள் யாவும் அபானன் சுழிமுனை நாடியில் மேலேறினால் ஒடுங்கிவிடும் உபாயம் அறிவித்ததாக கூறியவாறு
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
கருத்து : “ சுழிமுனை உச்சியில் ஆன்மாவை சூழ்ந்துள்ள மாயை – கன்ம மலங்களை ஒழித்ததாகவும் “
வினை = கன்மம் மலம்
இருள் = மாயா மலம்
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
“ தலம் 4 = சாலோகம் – சாமீபம் – சாரூபம் – சாயிச்சியம் என்னும் 4 ஆகும் “
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
கருத்து :
“ அபானன் சுழிமுனை நாடியில் மேலேறினால் நவத் துவாரங்களை மூடி விட முடியும் – ஐம்புலக் கதவையும் மூடும் உபாயம் அறிவித்தவாறு “
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
கருத்து : “ உரையற்ற மோன நிலை கூடச் செய்து – ஆன்ம நிலையில் தன்னை நிலைனிறுத்தியதை கூறியவாறு “
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
கருத்து : “ இடகலை – பிங்கலைக்கான அக்ஷரங்கள் அறிவித்து சுழிமுனை நாடியின் உச்சித் துவாரமும் தனக்கு காட்டி “
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
கருத்து : “ சுழிமுனை நாடி – சோமசூரியாக்கினி மண்டலங்களை இணைத்து மேல் செல்கின்றது “
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
கருத்து : “ இரு புருவ மத்தியில் இருக்கும் மூலத்தில் ” மூலக்கனலை ” காற்றால் எழுப்பும் சாதனா தந்திரத்தை தனக்குத் தெரிவித்து “
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
கருத்து : “ சந்திர கலையின் 16 கலைகளையும் காட்டி “
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
கருத்து :
1 சத்த – காது – கேட்டல்
2 பரிச – உடல் – தொடுணர்வு
3 ரூப – பார்க்கும் உணர்வு
4 ரச – சுவை உணர்வு – நாக்கு
5 கந்தம் – மூக்கு – முகர் உணர்வு
6 புத்தி
7 மனம்
8 அகங்காரம்
இந்த எட்டும் சேர்ந்தது புரியட்ட காயம் என்று விளக்குகின்றார் மூலர் பெருமான்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
கருத்து : “ சுழிமுனை உச்சியில் பிரமரந்த்ரம் காட்டி – முத்தீ ஆகிய சோமசூரியாக்கினி கலைகளை ஒன்றுச் சேர்த்து முத்தி அனுபவம் எனக்குச் சித்திக்கச் செய்து “
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து
கருத்து : “ என் ஆன்மாவை எனக்குக் காட்டி அருள் செய்து “
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
கருத்து : “ உரை மனம் கடந்த ஆன்ம நிலையில் என்னை லயம் செய்ய வைத்து “
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
கருத்து : “ நாதத்தில் சிவத்தைக் காட்டி “
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
கருத்து : “ என் சிந்தையுள் ஆன்மாவைக் காட்டி “
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
கருத்து : “ நமசிவாய என்னும் 5 எழுத்தின் அருத்தம் எனக்குத் தெரிவித்து”
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரண !
BG Venkatesh
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.