Friday, March 6, 2026

சன்மார்க்க மாநாடு -2

சன்மார்க்க மாநாடு -2 வடலூர் என்னைப் பேச அழைத்தார் - என் அனுபவங்கள் பகிரலாம் என்றனர் 1 ஜீவகாருண்ணியம் - கொல்லாமை - அருள் பெறுதல் "ஜீவகாருண்ணியம் மோட்ச வீட்டின் திறவு கோல் " 2 "ஊனினை நீக்கி உண்பவர்க்கன்றி தேனமர் பூங்கழல் சேர ஒண்ணாதே " 3 " தன் ஊன் பெருக்கற்கு பிறிதுஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?" 4 அவிசொரிந்து ஆயிரம் வேட்டளினும் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று இது பற்றிப்பேசி - விளக்கமும் தந்தேன் இது சொன்னவுடன் எல்லாரும் சூப்பர் - சூப்பர் - ஒரே ஊளை - விசில் சப்தம் தான் மக்கள் உணர்ச்சி வேகத்தில் என்னைக் கட்டி அணைத்து கொஞ்சினர் ஒருவர் எனக்கு காசு மாலை அணிவித்தார் மற்றொருவர் எனக்கு -இலவச சுற்றுலா - சிங்கப்பூர் மலேஷியா என அறிவித்தார் பின் நான் அவசரப்பட வேண்டாம் என கூறினேன் இதெல்லாம் கூறிய வள்ளல்/திருமூலர் - வள்ளுவர் - பின் என்ன சொல்கிறார்கள் என பார்க்கவும் என தெரிவித்தேன் எங்ஙனம் நாம் அருள் பெறக் கூடுமெனில் ?? வள்ளல் தன் உரை நடையில் 1 "தன் ஜீவ - தேக - போக சுதந்திரம் - அனைத்தையும் விட்டுவிட்ட போது தான் கிடைக்கும் என அருள் அறிவிக்க தான் அறிந்து கொண்டதாக தெரிவித்திருக்கிறார் " என கூறவும் - "மக்கள் தங்கள் முகத்தை சுருக்கிக்கொண்டனர் - கருத்துப்போய்விட்டது" 2 அன்போடுருகி அகம் குழைவார்க்கன்றி என்பொன்மணியை எய்த வொண்ணாதே திருமன்திரம் இது யார் ஒருவன் ஆன்ம அனுபவம் பெற்ற பின் - அவன் அபெஜோதியை கணடபின் அவன் ஆன்மா உருகினால் ஒழிய அவன் அபெஜோதி ஆக முடியாது எங்கிறது என்றேன் மக்கள் இல்லை இல்லை என்றார் - அன்னதானம் ஜீவகாருண்ணியம் தான் வழி என்றார் என் மீது கல் - செருப்பு - முட்டை வீசினர் நான் சன்மார்க்கத்துக்கு தப்பான பொருள் சொல்வதாக கூறினர் 3 அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 19 அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம் ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம் விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும் கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும் இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே. பொருள் இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும் "யார் ஒருவர் ஆன்ம தரிசனம் செய்கிறாரோ அவர் தம் இரு்ம்பு ஒத்த ஜீவன் / மனம் கனியும் உருகும் கரையும் எங்கிறார்" இந்த அனுபவம் எல்லாம் வெறும் புறக்கிரியைகளால் அன்ன தானத்தால் ஜீவகாருண்ணியத்தால் சித்திக்காது என்றேன் மக்கள் இசைந்த பாடிலை -ஒப்புக்கொள்ள இசையவிலை - பின்னர் நிலை மோசமாக ஒருங்கிணைப்பாளர்கள் என்னை Z பிரிவு பாதுகாப்புடன் குண்டு துளைக்கா காரில் அனுப்பி வைத்தனர் ஒரே நேரத்தில் ரெண்டு உச்ச கட்ட உணர்ச்சி கடல் - கொந்தளிப்பு பார்த்துவிட்டேன் - உலகமும் சன்மார்க்கமும் பார்த்தது இது தான் சன்மார்க்கத்தின் உண்மை நிலை - சன்மார்க்கத்தாரின் நிலையும் கூட வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.