Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
அருள் பெறுதல்
அருள் பெறுதல்
1 அபெஜோதி அகவல் :
உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட
வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே
2 மெய்யருள் வியப்பு
அயனும் மாலும் தேடித் தேடி அலந்து போயி னார்
அந்தோ இவன்முன் செய்த தவம்யா தென்ப ராயி னார்
மயனும் கருத மாட்டாத் தவள மாடத் துச்சி யே வயங்கும்
அணைமேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சி யே.
எனக்கும் உனக்கும்
தவள மாடம் – வெண்மை கலந்த சாம்பல்
இந்த இரு பாட்டிலும் இருக்கும் வெள்ளை நிறம் தான் அருள் நிறமாகும்
தவள மாடம் – எழு நிலை மேல் கடை – சுழி உச்சி
அங்கு தான் மும்மலம் நாசமான பின் வீசும் அருட்கலை
இது தான் அருள் பெறுதல் என்பது
இது திரை விளக்கத்தில் வரும் வெண்மைத்திரை அனுபவம் ஆகும்
ஆக இது பெற வேண்டில் , பலப்பல வண்ணத் திரைகள் கடந்து தவத்தால் மேலேறணும்
இது அமுதகலசம் அதன் அனுபவம்
இதுக்கு மேலே கலப்புத்திரை அனுபவம்
அது அருள் அமுதம் சிற்றம்பலத்திலிருந்து இறங்கி சாதகனுக்கு அளிப்பதாகும்
அது ஆகாய கங்கை அனுபவம்
இது தான் சாகாதேகம் அளிக்கும் அருளமுத அனுபவம்
ஆக அருள் பெறும் இடம் சுழி உச்சி ஆகிய ஆன்மஸ்தானம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.