Friday, March 6, 2026

திருமந்திரம் -ஆறாம் தந்திரம் – அருளினால் ஞானம் பெறுதல்

திருமந்திரம் -ஆறாம் தந்திரம் – அருளினால் ஞானம் பெறுதல் “ அருள் திருவடி பெருமை “ நாடு முறவுங் கலந்தெங்க ணந்தியைத் தேடுவன் றேடிச் சிவபெருமா னென்று கூடுவன் கூடிக் குரைகழற்கே செல்ல வீடு மளவும் விடுகின்றி லேனே 1654 விளக்கம்: என் சிந்தையில் கலந்து நிற்கும் நந்தியாகிய குருவை தேடுவேன் தேடி , சுத்த சிவம் என அறிந்து அதனுடன் கலப்பேன் அப்போது அருள் துணையால் நாதத்தொனி விளங்கு அவன் திருவடிகள் நான் கலக்கும் வரையில் அதன் இணையடியை நான் விடாமல் பற்றி நிற்பேன் தவத்தால் சிந்தையால் எண்ணத்தால் திருவடி நினைவாகவே இருந்து சாதிப்பேன் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.