Friday, March 6, 2026

திருமந்திரம் - இழந்த இளமை திரும்பப் பெறுதல்

திருமந்திரம் - இழந்த இளமை திரும்பப் பெறுதல் மேலை நிலத்தினள் வேதகப் பெண்பிள்ளை மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை ஏல எழுப்பி இவளுடன் சந்திக்க பாலனும் ஆவான் பார் நந்தி ஆணையே கருத்து : மேலை நிலத்தினள் = சுழிமுனை உச்சி - துவாரம் , அங்கு நாதம் என்னும் பெண் விளங்குகின்றாள் மூலத்தில் இருக்கும் விந்துகலையை சாதனா தந்திரத்தால் எழுப்பி , மேலேற்றி , நாதத்துடன் கலக்கச் செய்தால் , கிழவனும் பாலனாவான் - இது என் குரு நந்தி மீது ஆணை இதை உறுதிப்படுத்தும் சிவவாக்கியர் பாடல் உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை கருத்தினால் இருத்தி கபாலம் ஏற்ற வல்லீரேல் விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும் அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.