Monday, March 16, 2026

சந்தேகம் தெளிதல் – முப்பொருள் உண்மை

சந்தேகம் தெளிதல் – முப்பொருள் உண்மை உண்மை சம்பவம் – கோவை - மே 2024 என் மாணவர் கேட்ட கேள்வி : நீங்கள் கூறிய கருத்து படி , முப்பொருளும் - பதி பசு பாசம் எக்காலத்தும் உளதெனில் , ஜீவன்/ ஆன்மா எப்போதும் ஞானத்துடனே இருக்குமா ?? நாம் பயிற்சி / முயற்சி செய்து ஞானம் அடையத்தேவையிலை ஆயிற்றே? நான் : இது எப்படி சரி ஆகும்?? இது தவறு ஈது ஓஷோ கூறுவது வாழ்க்கை கொண்டாட்டம் தான் அதனால் ஜாலியாக இருக்கவும் நீங்கள் ஏற்கனவே அதை அடைந்து விட்டீர்கள் – அதுவாக இருக்கிறீர்கள் மாதிரி இருக்கு இந்த விளையாட்டு , நம் வாழ்வு துன்பம் துயரம் முயற்சி பயிற்சி எல்லாம் ஞானம் அடைவதுக்கு தானே தவிர வேறேதுக்குமிலை இதை அறியாத மக்கள் வீணே தங்கள் வாழ்வை கழித்துக்கொண்டிருக்கின்றால் அது மிகையல்ல ஒரு இடத்தில் புள்ளியில் இருந்து வந்தோம் , மீண்டும் அதே புள்ளிக்கு போய் சேர வேண்டும் இது தான் ஒவ்வொரு உயிரின் கடமை அதை தான் ஞானம் அடைதல் திருவடி பேறு என்றெலாம் நம் முன்னோர் சித்தர் பெருமக்கள் கூறி சென்றுள்ளார் எ கா : ஒரு செல்வந்தன் கோடி ரூபாய் தன் வியாபாரத்தில் நட்டம் மீண்டும் உழைத்து உழைத்து இழந்த அந்த செல்வத்தை அடைய வேண்டும் அது மாதிரி தான் நாம் ஞானம் அடைய எடுக்கும் முயற்சிகள் எல்லாமே அவர் : சரி வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.