திருமந்திரம் - அங்கி யோகம்
மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து நோக்கி முற்காலுற்று
காலனை காய்ந்து அங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே
கருத்து :
மூலத் துவாரத்து மூளும் ஒருவனை = மூலத்தில் ( 2 புருவ மத்தியில் ) உருவாகும் மூலக்கனலை
மேலைத் துவாரத்து நோக்கி முற்காலுற்று = சுழிமுனை துவாரத்தில் சேர்க்கும் படி செய்து
அதாவது மூலத்தில் சாதனாதந்திரத்தின் மூலம் உருவாகும் மூலக்கனலை , சுழிமுனை நாடியின் உச்சியில் துவாரத்தில் உள் சேர்த்தால் , யமனை வென்று வாழலாம்
இதுக்கு பெயர் அங்கி யோகம் ஆகும்
அங்கி = அக்கினி
திருமூலர் தான் நிறைய யோகங்கள் கூறுகின்றார்
அஷ்டாங்க யோகம்
பரியங்க யோகம்
அங்கி யோகம்
சந்திர யோகம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.