Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
பரியங்க யோகம் – படி நிலைகள்
பரியங்க யோகம் – படி நிலைகள்
இது விந்துவிடா பெண் போகத்துடன் சம்பந்தம் உடைத்து
இது பற்றிப் பேசினாலோ அ எழுதினாலோ உடன் எல்லாரும் "த்ந்திரா" என்ற வார்த்தை பிரயோகம் செய்வர்
என்னமோ நம் சித்தர் இலக்கியத்தில் இல்லாதது அதில் சொல்லப்பட்டுள்ளது மாதிரி ஒரு வித மாயா தோற்றத்தை உருவாக்கிவிட்டனர் சிலர் - ஓஷோ மாதிரி
இது " பரியங்க யோகம் " என்ற தலைப்பில் திருமூலர் கையாண்டிருக்கிறார்
இது கட்டிலில் செயும் யோகம் என்ற அர்த்தம் ஆம்
பிரமாணம் – அடி நிலை – இள நிலை
ஒரு ஊசி காற்றின் செயல்பாட்டினால் தான் மருந்து வெளியேற்றுகிறது போல் - சுவாசத்தை கட்டுப்படுத்தினால் - விந்து வெளியேற்றம் கட்டுப்படுத்தும்
இதுக்கு கண் - மனம் மேல் நோக்கி இருக்க வேண்டும்
அப்போது விந்து வெளி வராது
ஆனால் இன்பம் மட்டும் சாமானியரை விட பன்மடங்கு இருக்கும்
இதை ஒருவர் எழுதி புரியவைக்க முடியாது - நேரில் விளக்கினால் - பேசி கேட்டால் நங்கு புரிந்து கொள்ள முடியும்
கண் மேல் நின்றால் -அது மூச்சை அடக்கும் - சுவாசம் மிக குறைவாக போகும்
அந்த கட்டுப்பட்ட சுவாசம் விந்துவை கட்டுப்படுத்தும்
எல்லாம் கண்பார்வையில் இருக்கு வித்தை
1 வள்ளலார் - தன் உரை நடையில்
பெண் தேக சம்பந்தம் வேளையில் - சுவாசத்தை நெற்றியில் மேலும் கீழும் உலாவச் செய்தால் - விந்து விடா பெண் போகம் சித்திக்கும் என்று வாசி அனுபவம் பேசுகிறார்
அதனால் இதன் ரகசியம் - சுவாசம் - அதன் ரகசியம் - கண் - பார்வையில் இருக்கு
யார் மூச்சு விடா வாழ்க்கை ( அதாவது மிகக்குறைந்த சுவாசத்துடன் வாழ்கிறாரோ - அவர்க்கு விந்து விடா பெண் போகம் சித்திக்கும் - இது உறுதி
தொடர்பு கொண்டால் இன்னமும் விளக்கம் சொல்லப்படும் - இதுக்கான பயிற்சி விளக்கப்படும்
2 முது நிலை
நெற்றிக்கண் திறக்கும் பயிற்சியில் இருக்கு இதன் சூக்குமம்
இதில் “ ப” கரக்குழி ஏறினால் நீண்ட நேர தளராத தீராத இன்பமும் - அதனால் பேரின்பமும் உண்டாகும்
பார்வை – சுவாசம் ரெண்டும் உச்சி பிளவு மேலேற வேணும்
அப்போது முழு பரியங்க யோகானுபவம் சித்தி ஆகும்
அந்த உச்சிக்குழி தான் பெண் யோனியே தவிர - நிஜத்தில் ஒரு பெண் வைத்து கலவி செய்து – இன்பம் அடைவது அல்ல
இப்படி நிஜ பெண் வைத்து செய்வது தான் இந்த யோகம் என பல போலி குருக்கள் கற்றுத்தருகிறார் - அவர் கர்ஜனை செய்கிறார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.