Friday, March 6, 2026

ஞானிகள் உலகமயம்

ஞானிகள் உலகமயம் 1 திருமந்திரம் மாணிக்கத்துள்ளே மரகத சோதியாய் மாணிக்கத்துள்ளே மரகத மாடமாய் ஆணிப்பொன் மன்றினில் ஆடும் திருக்கூத்தைப் பேணித்தொழுதென்ன பேறுபெற்றாரே 2 அருட்பா ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட காட்சிகள் ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள் அற்புதக் காட்சிய டி - அம்மா அற்புதக் காட்சிய டி. ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு வீதிஉண் டாச்சுத டி - அம்மா வீதிஉண் டாச்சுத டி. ஆணி வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு மேடை இருந்தத டி - அம்மா மேடை இருந்தத டி. ஆணி மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு கூடம் இருந்தத டி - அம்மா கூடம் இருந்தத டி. ஆணி கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை மாடம் இருந்தத டி - அம்மா மாடம் இருந்தத டி. ஆணி ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம் என்னென்று சொல்வன டி - அம்மா என்னென்று சொல்வன டி. ஆணி ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி சீர்நீலம் ஆச்சுத டி - அம்மா சீர்நீலம் ஆச்சுத டி. ஆணி பாரோர் நிலையில் கருநீலம் செய்ய பவளம தாச்சுத டி - அம்மா பவளம தாச்சுத டி. ஆணி மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம் மாணிக்கம் ஆச்சுத டி - அம்மா மாணிக்கம் ஆச்சுத டி. ஆணி பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப் பேர்மணி ஆச்சுத டி - அம்மா பேர்மணி ஆச்சுத டி. ஆணி வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள் வெண்மணி ஆச்சுத டி - அம்மா வெண்மணி ஆச்சுத டி. ஆணி இருவருமே ஆணிப்பொன்னம்பலத்திலே கண்டு அனுபவிக்கும் ஒளிகள் விளக்குகிறார் ஒரே அனுபவம் தான் எப்படி சைவமும் சன்மார்க்கமும் ஒத்துப்போகுது ?? எப்படி சைவம் தப்பாகும் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.