Friday, March 6, 2026

சஷ்டியப்த பூர்த்தியும் காயகல்பமும் “

சஷ்டியப்த பூர்த்தியும் காயகல்பமும் “ சஷ்டியப்தப் பூர்த்தி இந்த ஹோமத்தில் – பூரண கலசம் பூஜை செய்தும் – நவ தானியங்களை கொண்டும் பூஜை செய்தும் – முடிவில் அந்த கலச நீரை ஒரு சல்லடை வழியாக அந்த தம்பதியினர் மீது சிறு சிறு துளிகளாக விடுவர் இந்தச் சடங்கினால் அவர்களுக்கு இளமை திரும்ப அடைவதாக ஐதீகம் இந்தச் சடங்கில் ஒரு மாபெரும் உண்மை பொதிந்து இருக்கிறது பூரண கலசம் = பிரணவம் நவ தானியங்கள் / கல் = பிரணவம் அமைக்க தேவையான 9 பொருட்கள் தங்கம் / செல்வம் – விந்து சத்தி சல்லடை நீர் - அமுதம் அதாவது விந்து சத்தி உச்சிக்கு மேலேத்தி அதை அமுதமாக மாத்தி அதை சல்லடை வழியா விழ வைத்தால் , அதை நம் உடல் முழுதும் பரவச் செய்தால் , நாம் இளமை மீட்டும் அடைவோம் - நம் உடல் காயகல்பம் அடையும் என்பது தான் உண்மையான தத்துவ விளக்கம் இதை நடைமுறைப்படுத்தினால் இளமை மீண்டும் கிடைக்கும் இதில் எங்கு உடற்பயிற்சி ஏதாவது இருக்கா ?? ஆகையால் காயகல்பம் என்பது உலகம் கற்பிப்பது போல் , அது உடற்பயிற்சி அல்ல அது மனதால் செயும் பயிற்சி இதன் சூக்குமம் விந்துவில் இருப்பதாகும் உலகம் நம்பினால் மோசம் போவோம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.