Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 2, 2026
திருவாசகம் – அச்சோப்பத்து பதிகம் - சன்மார்க்க விளக்கம்
திருவாசகம் – அச்சோப்பத்து பதிகம் - சன்மார்க்க விளக்கம்
மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூநெறியே சேரும்வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே 4
விளக்கம் :
இந்த பூமியில் பிறந்தும் இறந்தும் கொண்டிருந்தேனை , இந்த சுழற்சியிலே
உழன்றிருந்தவனை , அன்பாகிய ஆன்மா என்னும் எண்ணமிலா நிலை அருளியும் , வெண்ணீறாகிய அருள் நீறு எனக்கு உகந்து அளித்து இறவா நிலை சேரும் வண்ணம் எனக்கு அருளியவாறு சிவம் ஆர்க்கு செஉயும்??
அன்பு = ஆசையிலா ஆன்மா
வெண்ணீறு = அருள் பொடி என அறிதல் வேண்டும்
வெங்கடேஷ்
“ சைவ சித்தாந்தம் பெருமை “
திருமந்திரம் - 5 தந்திரம் – ஆன்மா பெருமை
கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞான முறைமுறை நண்ணியே
சொற்பத மேவித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.1
பொருள் :
கற்க வேண்டிய ஞான நூல்களை கற்று , யோகம் பயின்று , ஞானம் பெற்று , குற்றமிலா மேலான நிலையாகிய தற்பரம் எனும் தன் சுய வெளி ஆகிய ஆன்ம நிலை வெளியில் உறைந்திருப்பர் யார் எனில் ??
சைவ சித்தாந்தரே என்கிறார் மூலர்
இது சைவ சித்தாந்தத்தின் எல்லை அனுபவம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.