Monday, March 2, 2026

“ பழுக்கினும் பிஞ்சாம் “ – திருவடி தவம் பெருமை

“ பழுக்கினும் பிஞ்சாம் “ – திருவடி தவம் பெருமை உண்மை சம்பவம் – சென்னை - 2026 சமீபத்தில் ஒரு சஷ்டியப்த பூர்த்தி விழாவில் கலந்து கொண்டேன் விழா நடத்திய ஐயர் – ஏன் சல்லடை நீர் மணமக்கள் மீது ஊற்றுகிறார் என்பதுக்கான விளக்கம் எல்லாம் அளிக்கவில்லை இது இளமை மீட்டெடுக்கும் சடங்கு என எல்லாம் விளக்கம் அளிக்கவில்லை எனக்கு தெரியும் என்பதால் நான் சும்மாவே இருந்துவிட்டேன் பின் ஒரு உறவினர் என்னிடம் கேட்டார் : உங்க விழா எப்போது ?? நான் : இன்னும் 2 ஆண்டுகள் இருக்கு அவர் : செய்வீர்களா ?? நான் : செய்து கொள்ள மாட்டேன் அவர் : ஏன் ? நான் : இந்த விழா வெறும் சடங்காக மட்டுமே – வீணான செலவு – பயனில்லை – Get together மாதிரி – அவ்வளவே ஏன் செய்து கொள்கிறோம் எதுக்காக செய்கிறோம் என்ற விவரம் தெரியாமலே – எல்லாரும் செய்து கொள்கிறார் நாமும் செய்து கொள்வோம் என செய்து கொள்வது வீண் ஐயர் கூறிய விளக்கம் எல்லாம் ஒன்றும் சரியில்லை அவர்க்கு தெரியவில்லை நான் ஏற்கனவே திருவடி பயிற்சி தவம் மூலம் இளமை மீட்டெடுக்கும் வழியில் பயணித்து வருகிறேன் அதில் வெற்றியும் கண்டு அதில் அனுபவமும் பெற்றிருப்பதால் இந்த வெற்று கூச்சல் சடங்கு செய மாட்டேன் என் பாதம் தொட்டு பார்க்கவும் - அவர் தொட்டுப்பார்த்துவிட்டு ஆமாம் மிக மென்மையாக இருக்கு எவ்வளவு மென்மை அடைந்திருக்குது பிறந்த பிள்ளை மென்மை 58 வயதுக்கு இருக்கு இது தான் கண்ணுக்கு இருக்கும் மகிமை பெருமை – அதன் தவம் ஆகையால் நான் “ பழுக்கினும் பிஞ்சாம் “ என்ற திருமந்திரப் பாட்டுக்கு உதாரணம் என்றேன் அவர் : இந்த சடங்கு வேணாம் சும்மா ஒரு பிறந்த நாள் விழா மாதிரி நான் : அதுவும் தேவையிலை - வீண் என் மகன் திருமணம் இருக்கு ஏதோ என் வீட்டில் விசேஷமே இல்லாத மாதிரியாக ஆகையால் நான் செய்து கொள்ள மாட்டேன் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.