Monday, March 2, 2026

குண்டலினி யோகம்

குண்டலினி யோகம் இந்த யோகம், நம் ஆன்மீக சமுதாயத்திலே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம் அனேக மக்கள் , குண்டலினி யோகம் பயில்வதாக நாம் கேட்டிருப்போம் பட்டப் படிப்பில் , எப்படி specialisation உள்ளதோ, அவ்வாறு, யோகத்தில் , specialisation , குண்டலினி யோகம் என்று சொல்லலாம். தற்கால நம்பிக்கைகள் : அனேக குருமார்கள் , நம் சம காலத்திலும் கூட, குண்டலியின் இருப்பிடம் முதுகுத் தண்டின் கீழ் உள்ள மூலாதாரம் என்றே உலகிற்கு அறிவித்துள்ளனர் அதனை விழிக்க வைக்கும் முறையானது யாதெனில் : மூச்சுப் பயிற்சியும் ஆசனங்களும் என்றே கூறிச் சென்றுள்ளனர் மேலும் , அதனை ஒவ்வொரு சக்கரமாக மேலேற்றி, கடைசியில், ஆக்ஞா சக்கரத்திற்கு வந்து நிறுத்துதல் என்பர் மேலும் , சில குருமார்கள், இந்த யோகம் ஏதோ கடினமான கணக்கு ( நிறைய படிகள் ) போன்று பாவித்து, அதனை எளிமைப் படுத்துதல் போன்று, இதனை SKY – Simplified Kundalini Yoga ) என்று கற்றுகொடுத்தனர் ஒவ்வொரு ஆதாரமாக குண்டலினியை மேலேற்ற வேண்டும் – பயிற்சி முடிந்த பின் – அதை கீழிறக்கி கொண்டு வந்து மூலாதாரத்தில் சேர்த்து விட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தனர் ஒவ்வொரு ஆதாரமாக குண்டலினியை மேலேற்றுவது கடினமாக இருக்கின்றது ( நிறைய படிகள் ) என்பதால் , இதனை நேராக ஆக்ஞா சக்கரத்திற்கு வந்து நிறுத்துதல் தான் SKY என்று கற்றுத் தந்தனர் உண்மை : இருப்பிடம் மற்றும் விழிப்பிக்கும் முறை பாரதத்தில் , கண்ணன், யமுனை நதியின் அடியிலிருந்து ஒரு மிகப் பெரிய நாகத்தை , எழுப்பிக் கொண்டு வந்து , அதன் மீது நடனம் ஆடுவான் – ” காளிங்க மர்த்தனம் – நடனம் ” என்று உலகமே ஒவியங்களாக வரைந்து அதை தலையில் வைத்துப் போற்றுகின்றது அந்த நாகம் தான் – குண்டலினி தமிழ் வார்த்தை யமுனை பிரித்தால் = ” ய + முனை ” என்று வரும் – இது சுழிமுனையைக் குறிக்கும் – ” ய” என்பது 10 ஆகிய ஆன்மாவைக் குறிக்கும் எனவே , குண்டலினி இருப்பிடம் யகாரமாகிய ஆன்மாவிடத்தில் என்று உறுதியாகின்றது – முதுகுத் தண்டின் அடியில் உள்ள மூலாதாரத்தில் அல்ல வள்ளலார் : ” எனது குளத்தினும் நிரம்பிய குருசிவபதியே ” என்று அகவலில் பாடுகின்றார் – இங்கு குளம் என்பது நெற்றி ஆகும் குளம் என்பது நீர் நிறைந்தது – யமுனை நதியும் நீர் நிறைந்தது ஆகவே , குண்டலினி , ஆன்மா இருக்கின்ற நெற்றியில் இருக்கின்றதே அல்லாது மூலாதாரத்தில் அல்ல குண்டலினி மீது கண்ணன் ஆடும் அழகினைத் தான் – ” நாகஜோதி – நாகமணி – நாகரத்தினம் ” என்ற பெயர்களில்லெல்லாம் வழங்குகின்றோம் அசைப்பிக்கும் முறை : ” சாலனம் ” என்னும் தந்திரத்தாலல்லாது வேறெதனாலும் குண்டலினியை அசைக்கவோ விழிப்பிக்கவோ முடியாது – இந்த தந்திரத்தை தக்க குரு மூலம் தெரிந்து பயில வேண்டும் மேலும் திருவடி உதவி இல்லாமல் இதனை செய்ய முடியாது என்பதுவும் உறுதி குண்டலினியை மேலேற்றுவதும் இல்லை கீழிறக்குவதும் இல்லை – அது ஒரே இடத்தில் , தன் விஷ முகத்தால் , பிரம்மத்துவாரத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றது சிதாகாயப் பெருவெளிக்கு போகின்ற நம் பாதையை மறைத்துக் கொண்டிருக்கின்றது குண்டலியின் இருப்பிடமாக இந்த உலகினில் அடையாளமாக காட்டப்பட்டிருக்கும் ஊர்: 1. மதுரை – துவாதசாந்தம் மதுரையில் நடந்த 64 திருவிளையாடல்களில் ஒன்று – ஒரு பெரிய நாகம் இந்த ஊரின் எல்லையை சுற்றி இருப்பதாக காட்டியிருக்கின்றார்கள் – அந்த நாகம் – குண்டலினி 2. ஆலப்புழா – கேரளா : ஆலம் = விஷம் புழா – சிறிய துவாரம் – பிரம்மத்துவாரம் சாதகன், சாதனைகள் மூலம் துவாதசாந்த நிலை அடைந்து , குண்டலினியை அப்புறப்படுத்தி விட்டு, மேல் நிலைகளுக்கு செல்ல வேண்டும் – தகுதி உடைய சாதகர்களுக்கு குண்டலினியும் வழி விட்டு நிற்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.