Monday, March 2, 2026

யோகர் சித்தர் பாடல் - 4

யோகர் சித்தர் பாடல் - 4 1 எட்டாத பேரின்பம் என்னைவி ழுங்கிற்றடி கிட்டாது முட்டாதடி - தங்கமே கேட்டு மகிழ்ந்திரடி கருத்து : எட்டாத பேரின்பம் = ஆன்மா ஆன்மா என்னை விழுங்கிவிட்டது - அதாவது ஜீவனாகிய நான் ஆன்மாவில் கலந்து விட்டேன் இது அவ்வளவு எளிதில் கிட்டக்கூடியது அல்ல - இது முட்டாத பூசை 2 சுட்டாமல் சுட்டிடடி சோதிசிவ ரூபமடி கிட்டாத பொருளென்று - தங்கமே கீழ்நோக்கிப் பாராதே பொருள் : ஆன்மா ஜோதி சொருபம் ஆகும் , அது எளிதில் கிட்டாத பொருள் ஆகும் - எனவே உணர்வு மேல் நோக்கியே வைக்கவும் - கீழ் நோக்காமல் பார்த்துக்கொள்ளவும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.