Saturday, March 7, 2026

திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம் இத்தவ மத்தவ மென்றிரு பேரிடும் பித்தரைக் காணில னாமெங்கள் பேர்நந்தி யெத்தவ மாகிலெ னெங்கும் பிறக்கிலெ னொத்துணர் வார்க்குஒல்லை யூர்புக லாமே. 1568 விளக்கம் : இந்த தவம் சிறந்தது அந்த தவம் தாழ்ந்தது என இருமையில் நிற்போராகிய பைத்திய மனம் உடையவரை எங்கள் நந்தி கண்டுகொள்வதிலை ஏனெனில் தெய்வம் இறை ஒருமையில் இருப்பது எந்த சரியான தவம் ஆக இருந்தாலும் , எந்த நாட்டில் பிறந்து பயின்றாலும் , அந்த தவத்துக்கான நெறியோடு ஒத்து போனால் , பழமையான ஊரான சிவம் விளங்கும் உச்சி சேரலாகுமே உலகில் ஆர் ஒத்துக்கொள்வார் ?? எல்லா மதமும் சண்டை தான் போடும் ஒத்துப்போகாது போகத்தெரியாது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.