ஞானியர் உலக மயம் - முப்பாழ் – மூவெளி விளக்கம்
முப்பாழ் – சன்மார்க்க விளக்கம்
1 திருமூலர் திருமந்திரம் :
காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக்
காரிய காரண வாதனை கண்டறும்
சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே.
இது உயிர் வெளி – கலை வெளி – சுத்த நல் வெளி ஆகும் – இவைகளில் தான் 36 தத்துவங்கள் அடங்கியுள்ளன
2 வள்ளல் பெருமான் - அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கம்
மனிதராகிய நாம் வாழ்வதும் எல்லா செயலையும் ஆற்றுவது வெளியில் தான்
அதே போல்
நம்மை ஆட்டிப்படைக்கும் தத்துவங்களும் இருப்பது வெளியிலும் தான்
அவைகள் தத்துவ வெளிகள் ஆம்
தத்துவங்கள் 36
ஆன்ம தத்துவம் – 24
வித்யா 7
சிவ தத்துவம் 5
மொத்தம் 36
இவைகள் எங்கெங்கு உள என விளக்கும் அகவல் வரிகள்
1 மனமுதல் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
அனமுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 573 – 574
இதில் ஆன்ம தத்துவங்கள் 24 ம் உயிர் வெளியில் வகுத்து வைத்துள்ளதாம் அபெ ஜோதி
2 காலமே முதலிய கருவிகள் கலைவெளி
ஆலுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 575 -576
இந்த வரியில் வித்தியா தத்துவங்கள் எலாம் கலைவெளியில் வகுத்து வைத்துளதாம் அபெஜோதி
3 துரிசறு கருவிகள் சுத்த நல் வெளியிடை
அரசுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 577 -578
சுத்த தத்துவங்கள் ஆகிய சிவ தத்துவங்களை சுத்த நல் வெளியில் அபெஜோதி வைத்து வகுத்துள்ளதாக தெரிவிக்கிறார் வள்ளல் பெருமான்
எல்லாம் வெளியில் தோன்றி அங்கேயே ஆட்சி செய்தும் முடிவில் முடியும்
இருவரும் ஒரே கருத்து தான் கூறியுளார் – உலக மயம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.