Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 13, 2026
அறம் பொருள் இன்பம் வீடு – இக பர விளக்கம் “
அறம் பொருள் இன்பம் வீடு – இக பர விளக்கம் “
1 உலகம் :
இகத்தின் பொருளாக
இரக்கம் கருணை – தானம் தருமம்
உலக வாழ்வில் ஈடுபடல் – அறமாகவும்
அற வழியில் செல்வம் ஈட்டுதல் பொருளாகவும்
வினக்கீடாக போகம் அனுபவிப்பது
பெண்கள் போகம் இன்பமாகவும்
மோட்சத்திற்கு தன்னை தயார்படுத்துதல் வீடாகவும் நிற்க
2 ஞானியர் விளக்கம் : திருவாசகம்
மேலான பரத்தின் பொருளாக
தேகத்தில் சிவதரிசனமே அறமாகவும்
தேகத்தின் கண் மறைந்துள்ள
ஞானச் செல்வங்களை வெளிப்படுத்தி
தன் வயப்படுத்தலே பொருளாகவும்
சாதகன் சதா ஆனந்தத்தில் திளைத்திருத்தலே இன்பமகாவும்
இருதயக் கமலத்தில் – துவாத சாந்தப் பெரு வெளியில் உறைதலே வீடாகவும் விளங்கும்
3 ஔவையார் : இது இகம் சார்ந்த விளக்கம்
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.