Friday, March 13, 2026

அருட்பா - நல்ல மருந்து/ ஞான மருந்தும் அருள் மருந்து

அருட்பா - நல்ல மருந்து/ ஞான மருந்தும் அருள் மருந்தும் 1 " திருவருட்பா - நல்ல மருந்து " விந்து பெருமை விந்து ஆற்றல் வல்லமை நல்ல மருந்து = விந்து நல்ல மருந்திம் மருந்து - சுகம் நல்கும் வைத்திய நாத மருந்து. அருள்வடி வான மருந்து - நம்முள் அற்புத மாக அமர்ந்த மருந்து இருளற வோங்கும் மருந்து - அன்பர்க் கின்புரு வாக இருந்த மருந்து. - நல்ல சஞ்சலந் தீர்க்கும் மருந்து - எங்குந் தானோதா னாகித் தழைக்கும் மருந்து அஞ்சலென் றாளும் மருந்து - சச்சி தானந்த மாக அமர்ந்த மருந்து. - நல்ல வித்தக மான மருந்து - சதுர் வேத முடிவில் விளங்கு மருந்து தத்துவா தீத மருந்து - என்னைத் தானாக்கிக் கொண்ட தயாள மருந்து. - நல்ல பிறப்பை யொழிக்கு மருந்து - யார்க்கும் பேசப் படாத பெரிய மருந்து இறப்பைத் தவிர்க்கும் மருந்து - என்னுள் என்று மதுரித் தினிக்கு மருந்து. - நல்ல நானது வாகு மருந்து - பர ஞான வெளியில் நடிக்கு மருந்து மோந வடிவா மருந்து - சீவன் முத்த ருளத்தே முடிக்கு மருந்து. - நல்ல புத்தமு தாகு மருந்து - பார்த்த போதே பிணிகளைப் போக்கு மருந்து பத்த ரருந்து மருந்து - அநு பானமுந் தானாம் பரம மருந்து. - நல்ல மாலயன் தேடு மருந்து - முன்ன மார்க்கண்ட ரைக்காக்க வந்த மருந்து காலனைச் சாய்த்த மருந்து - தேவர் காணுங் கனவினுங் காணா மருந்து. - நல்ல தற்பர யோக மருந்து - உப சாந்த ருளத்திடைச் சார்ந்த மருந்து சிற்பர யோக மருந்து - உயர் தேவரெல் லாந்தொழுந் தெய்வ மருந்து. - நல்ல அம்பலத் தாடு மருந்து - பர மாநந்த வெள்ளத் தழுத்து மருந்து எம்பல மாகு மருந்து - வேளூர் என்னுந் தலத்தி லிருக்கு மருந்து. - நல்ல நல்ல மருந்திம் மருந்து - சுகம் நல்கும் வைத்திய நாத மருந்து 2 திருவருட்பா - ஆறாம் திருமுறை ஞான மருந்து ஞான மருந்திம் மருந்து - சுகம் நல்கிய சிற்சபா நாத மருந்து அருட்பெரும்ஜோதி மருந்து - என்னை ஐந்தொழில் செய்தற்கு அளித்த மருந்து எல்லாம் செய்ய வல்ல மருந்து - என்னுள் என்றூம் விடாமல் இனிக்கும் மருந்து என்னுயிர் காக்கும் மருந்து- என்றும் என்னுயிராகிய இன்ப மருந்து என் நிறையான மருந்து - மகிழ்ந்து எனக்குத்தன் பொன்மேனி ஈந்த மருந்து தன்னறிவாகும் மருந்து - என்னைத் தந்த மருந்து எந்தன் சொந்த மருந்து கதி தரும் இன்ப மருந்து - அருட் கண்ணால் எந்தன்னைக் கலந்த மருந்து கற்பூர ஜோதி மருந்து - பசும் கற்பூரம் நன்மணம் காட்டும் மருந்து ஆறாறுக்கப்பால் மருந்து - அதற்கு அப்புறத் ஈராறுக்கப்பால் மருந்து என்று வள்ளல் பெருமான் பாடுவது எந்த மருந்தை பற்றி ?? இவ்வளவு பாடல்களும் பெயர்களும் பெருமையும் ஒரே பொருளையேச் சாரும் அது தான் - விந்து விந்துவில் தான் எல்லா சூட்சுமங்களும் அடங்கி உள்ளன என்பது உண்மை அதனை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் ஆனால் அதனை எப்படி சாதனையில் பயன்படுத்தி அதில் வெற்றி காண்பது என்பது என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றது இந்த விந்துவினை - வள்ளலார் - 1 கீழ்னிலை சுக்கிலம் 2 மேல் நிலை சுக்கிலம் என்று வகைப் பிரிக்கின்றார் கீழ் நிலை சுக்கிலத்தை மேல் நிலை சுக்கிலமாக மாற்றுவது தான் சாதனை - இதனை அறிந்து , செய்து சாதனையில் வெற்றியும் கண்டால் - சாகாக்கல்வி - முத்தேக சித்தி - மரணமிலாப் பெருவாழ்வு - 647 கோடி சர்வ ஞான சித்திகளும் நம் கைவசம் - திருச்சிற்றம்பலப் பிரவேசம் - திருவடி தரிசனம் - அதனுடன் கலப்பு என்று எல்லா அனுபவங்களும் சித்திக்கும் 3 அகவல் வரிகள் – அருள் மருந்து உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந் தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ் சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும் உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே என்றே யென்னினு மிளமையோ டிருக்க நன்றே தருமொரு ஞானமா மருந்தே மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர் நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே சிற்சபை நடுவே திருநடம் புரியும் அற்புத மருந்தெனு மானந்த மருந்தே 1 & 2 விந்து அமுதமாக மாறியபின் அது நல்ல / ஞான மருந்து ஆகும் இது நம் கோவிலில் இருக்கும் லிங்கம் மீதிருக்கும் அமுதகலசத்தில் இருந்து சொட்டும் அமுத்துக்கு சமம் 3 இது ஆகாய கங்கை ஆகிய அமுதம் இது சிரசின் உச்சியில் இருந்து இறங்கும் அமுதம் ரெண்டும் ஒன்றல்ல – இது தான் முக்கியம் முதல் ரெண்டு வினைகள் தீர்க்கும் ஆனால் ஒளி தேகம் அளிக்காது மூன்றாவது ஆகாய கங்கை மட்டுமே அளிக்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.