Friday, March 13, 2026

உபதேச வினா – 2

BG Venkatesh / July 30, 2015 உபதேச வினா – 2 1 நவனிலை மேற்பர நாதத் தலத்தே ஞானத் திருனடம் நான் காணல் வேண்டும் மௌனத் திருவீதி வருவாயோ தோழி வாராமல் வீண்பழி தருவாயோ தோழி ( பாடல் 4 ) நவனிலை மேற்பர நாதத் தலத்தே – ஒன்பது கூட்டுப் பொருள்களின் மேல் நாத தத்துவத்திற்கு அப்பால் நவனிலைகள் – 5 இந்திரிய சத்திகள் – சோமசூரியாக்கினி கலைகள் 3 , பரவிந்து 1 – கூட்டுதொகை 9 – இவைகளுக்கு மேல் இருப்பது ஆன்ம நிலை ஞானத் திருனடம் நான் காணல் வேண்டும் – அசைந்து கொண்டிருக்கும் ஆன்மாவை நான் தரிசிக்க வேண்டும் மௌனத் திருவீதி வருவாயோ தோழி – மனமே ஆன்மாவிற்கு வழி காட்டும் சுழிமுனை நாடிக்கு வருவாயோ ?? 2 ஆறாறுக்கு அப்புறமாகும் பொதுவில் அதுவதுவா நடம் நான் காணல் வேண்டும் ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி ஏறி இழிந்திங்கு இறப்பாயோ தோழி ( பாடல் 5 ) ஆறாறுக்கு அப்புறமாகும் பொதுவில் அதுவதுவா நடம் நான் காணல் வேண்டும் – 36 தத்துவங்களுக்கு அப்பால் விளங்கும் ஆன்மாவின் அசைவாகிய திரு நடனத்தை நான் காண விழைகின்றேன் ெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.