Sunday, March 8, 2026

சிவவாக்கியர் பாடல் – சன்மார்க்க விளக்கம்

சிவவாக்கியர் பாடல் – சன்மார்க்க விளக்கம் கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே. விளக்கம் : கோவில் – 1008இதழ்க்கமலம் – நெற்றிக்கண் குளம் - பகாரக் குழி ஆவதும் அழிவதும் இல்லை – இது சைவ சித்தாந்தம் கூறும் முப்பொருள் உண்மை – பதி பசு பாசம் அதன்படி உயிர்கள் ஆகிய பசு தோற்றுவிக்கப்படுவதும் இலை அழிக்கப்படுவதும் இல்லை என்ற மாபெரும் உண்மை போட்டுடைக்கிறார் சித்தர் பெருமான் புறத்தே இருக்கும் கோவில் விட அகத்தே விளங்கும் கோயில் தான் உண்மை சத்தியம் அதைப்பிடித்து புறம் விடவும் சடங்கு ஆற்ற வேண்டாம் என்கிறார் சித்தர் பெருமான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.