Sunday, March 8, 2026

சிற்றம்பல அனுபவம் – ஒருமை

சிற்றம்பல அனுபவம் – ஒருமை ஞானிகள் உலகமயம் 1 சிவவாக்கியர் – சிற்றம்பல வாசல் பெருமை சாவதென்று சொல்வதும் பொய் சாவதும் பொய்ச்சர்வமும் ஆவதென்று சொல்வதும் பொய் ஆவதும் அழிவதும் பொய் காவலிட்ட மேலை வாசல் கால் கடந்த ஞானிகட்கு ஆவில் ஏறும் ஈசனன்றி யாருமிலை என்பதே திருவாரூரனே சிவ பெருமானே மேலை வாசல் = சிற்றம்பல வாசல் விளக்கம் : மெய் உடை சிற்றம்பல வாசல் நுழைந்து விட்ட ஞானியர்க்கு , எல்லாம் பொய் தான் உலகம் , ஆவதும் அழிவதும் . அவனுக்கு எங்கெங்கு நோக்கினும் பசு மேல் அமர்ந்திருக்கும் சிவமே தான் காண்பதல்லால் – வேறிலையே இது ஒருமை ஓங்கும் சிற்றம்பல அனுபவம் 2 அருட்பா அருட்பெருஞ்சோதி அட்டகம் எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே இதுஅது எனஉரைப் பரிதாய்த் தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத் தந்தெனைத் தன்மயம் ஆக்கிப் பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப் புத்தமு தருத்திஎன் உளத்தே அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த அருட்பெருஞ் சோதிஎன் அரசே. விளக்கம் : சிற்சபையில் இது அது என பிரித்து பார்க்க முடியாத , வாயால் உரைக்க முடியாத அனுபவமாக விளங்கும் என பாடுகிறார் வள்ளல் பெருமான் எல்லாம் ஒன்றே என ஓங்கும் சிற்றம்பல அனுபவம் ஆம் ஞானியர் கருத்து ஒருமித்துத் தான் போவார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.