Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 21, 2026
எனது அனுபவங்கள் - நான் காலத்துடன் மோதிய போது ???
எனது அனுபவங்கள் - நான் காலத்துடன் மோதிய போது ???
உண்மைச் சம்பவங்கள்
நான் கல்லூரி படிப்பு முடிந்து வேலை தேடிக்கொண்டிருந்தேன் - என் வயது 20
நான் அப்போது திருமந்திரம் - ஒழிவில் ஒடுக்கம் படித்துக் கொண்டிருந்தேன்
திருமந்திரம் - அஷ்டாங்க யோகம் படித்துவிட்டு , சீக்கிரம் சமாதி அடைய வேண்டும் என ஆசைப்பட்டேன்
ஒழிவில் ஒடுக்கம் படிக்கும் போது 36 தத்துவங்கள் , அதை எப்படி கடப்பது தெரியாது -
தற்போதம் எப்படி ஒழிப்பது என்பது தெரியாது
ஆனாலும் ஒரு இலக்கை நிர்ணயம் செய்தேன்
இன்னும் 5 வருடங்களில் 36 தத்துவம் கடந்து விட வேணும் - அத்துடன் சமாதி அடைந்துவிட வேணும்
- பின்னர் தான் தெரிந்தது - அது எவ்வளவு சிறுபிள்ளைத்தனம் என்று?? ஒரு விவரம் தெரியாமல் செய்தது குறித்து என் அறியாமையை நினைத்து சிரித்துக்கொள்வேன் - வெட்கப்படுவேன்
ஆனாலும் நான் தியானம் செய்து கொண்டிருந்தேன் என் முறையில்
ஒரு நாள் விஷனில் ஒருவர் வந்து" உன் தந்தை காலம் ஆகப்போகின்றார் " - நீ அழக்கூடாது " என்று கூறிச் சென்றார் - நான் கண்டுகொள்ள வில்லை
ஆனால் ஒரு வாரத்தில் அந்த துயரச் சம்பவம் நடந்தே விட்டது - ஜனவரி 1996
விஷனில் " திருவடி " காட்சி வந்து கொண்டே இருந்தது - எனக்கு அப்படி ஒரு கண்/ நயன தீக்ஷை இருக்கின்றது என்பது தெரியாது
பின் நான் சோகமாக அமர்ந்து இருந்த போது , மறுபடியும் விஷனில் " காமாட்சி அம்மன் சன்னதியில் இருக்கும் சன்மார்க்க சங்கம் செல்லவும் - அங்கு உனக்கு திருப்பம் காத்திருக்கின்றது என கூறியது
அது கூறியபடியே , நான் சன்மார்க்க தீக்கை வாங்கினேன் காஞ்சியில் - அப்போது தான் தத்துவ நிக்கிரகம் படித்து - கொஞ்சம் தெளிவு பிறந்தது - அப்போது என் வயது 28
36 தத்துவங்கள் என்ன என்ன என்று தெரியும் - ஆனால் எப்படி கடப்பது என்பது தெரியாது - சங்கத்திலும் சொல்லவில்லை
நான் என் முயற்சியில் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன்
பல நூல்கள் படித்தேன் - மந்திரம் - வாசகம் - அகத்தியர் - ஓஷோ - என அலசி ஆராய்ந்தேன்
எனக்கு மிகவும் கைகொடுத்தது திருமந்திரமும் வாசகமும் தான்
இதிலிருந்து தான் நெற்றிக்கண் திறப்பதுக்கு சாதனாமுறைகள் அமைத்து வந்தேன் - ஆய்ந்து ஆய்ந்து
ஒரு 3 மாதம் - தினமும் 25 பாய்ண்டுகள் எழுதுவேன் - ஏதோ தவறு என்று - மறுபடி ஆய்ந்து எழுதுவேன் - அடித்துவிடுவேன்
பின் தினமும் புதிதாய் எழுதுவேன்
3 மாதங்கள் இதே கதை தான்
பிறகு ஒரு தெளிவு வந்து அதை perfect செய்துவிட்டேன் - படிகள் எழுதி முடித்துவிட்டேன்
இது முடிக்கும் போது என் வயது 45
நான் 20 வயதில் 5 வருடங்களில் 25 வயதில் எல்லாம் முடித்து விட வேணும் என்று கணக்கு பண்ணினேன் - ஆனால் 36 தத்துவங்களை எப்படி நிக்கிரகம் செய்வது என்பதை மட்டும் கண்டுபிடிப்பதுக்குள் எனக்கு 45 வயதாகி விட்டது -
இப்போது வயது 50 ஆகின்றது
இன்னமும் நான் 36 வரை கடக்கவில்லை - சாதனம் பயின்று வருகின்றேன் - எப்போது நடக்கும்?? தெரியாது - அது அருள் கையில் - என்னிடத்தில் இல்லை என்று நான் அறிந்தும்
உணர்ந்தும் கொண்டேன்
அப்போது காலம் என்னைப் பார்த்து சிரிப்பது போல் தோன்றும் ?? நீ என்ன காலக்கெடுவை நிர்ணயிப்பது ?? உன்னால் ஒன்றும் முடியாது ?
எல்லாம் என் கையில் என்று சொல்வது போல் தோன்றும் - நான் வெட்கப்பட்டுப் போனேன் - அது முன் நான் சிறுமைப்பட்டுப் போனேன்
இது ஒன்றும் அன்னபூர்ணா ஹோட்டல் அல்ல நாம் ஆர்டர் செய்து சாப்பிடுவதுக்கு , அது எப்போது/ எது கொடுக்கின்றதோ அதைத் தான் நாம் சாப்பிட வேண்டும் - இது காலம் - இயற்கை எனக்குக் கற்றுக்கொடுத்த மிக பெரிய பாடம் - வாழ்க்கைப் பாடம் - நான் என்றென்றும் மறவேன்
அன்றிலிருந்து நான் சாதனத்தில் எந்த ஒரு விண்ணப்பம் வைப்பதில்லை - எது , எப்போது நடக்கின்றதோ , அது அப்போது நடக்கட்டும் என்று காத்திருக்கின்றேன் - இது
தற்போத ஒழிவு ஆகும் - அருள் சார்ந்த வாழ்க்கை - சாதனமும் ஆகும்
நான் சாதனத்தில் முயற்சி கூட செய்வதில்லை - அதுவே என்னை மேல் கூட்டிச்செல்லும் - நான் பார்த்துக்கொண்டிருப்பேன் அவ்வளவே -
I am just a passive spectator thats all
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.