Friday, March 6, 2026

சிறுவர் கதை – பெரிய்ய ஞானம்

சிறுவர் கதை – பெரிய்ய ஞானம் நாம் அனைவரும் , சிறு வயதில் அம்புலிமாமா சித்திரக் கதைகளைப் படித்திருப்போம் 1.அதில் ஒரு கதை : ஒரு நாடு அமைதியாக இருக்கும் – மக்கள், ராஜா , எல்லோரும் சுகமாக இருப்பர். திடீரென்று ஒரு ராட்சசன் வந்து அந்நாட்டை துவம்சம் செய்யும் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் முழிப்பர் மந்திரி/ராஜ குரு வந்து இளவரசனிடம் – நீங்கள் தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பார் – உங்களால் தான் முடியும் என்பார் என்ன செய்ய வேண்டும் என்றால் : ஏழு கடல் – ஏழுமலையைத் தாண்டி சென்றால் – ஒரு காட்டில் ஒரு குகை இருக்கும் – அதில் உள்ளே நுழைந்து சென்றால் – அங்கே ஒரு கிளி இருக்கும் – அதனை கொன்றால் , இங்கே இருக்கும் இந்த ராட்சசன் மாண்டு விடுவான் என்று வழி கூறுவார் இளவரசனும் ராஜ குரு கூறியவாறே , தன் குதிரையில் பயணத்தை தொடங்கி , சோறு, தூக்கம் , தாகம் , களைப்பு , அயர்ச்சி என்று பாராமல் ஏழு கடல் – மலையைத் தாண்டி சென்று , குகை அடைந்து , கிளியை கொன்று , ராட்சசனை கொல்வான் – இது கதை இது வெறும் கதை அல்ல – இதனுள் பெரும் ரகசியம் அடங்கி இருக்கின்றது நாடு = உடல் / தேகம் ராட்சசன் = மனம் இளவரசன் = ஜீவன் ஏழு கடல் – மலை = ஆதாரங்கள்/சக்கரங்கள் குகை = நெற்றிக் கண் அதாவது – ஜீவனானது , ஆதாரங்களைக் கடந்து மேலேறி , நெற்றிக் கண் அடைந்து , அதனுள் புகுந்து, அங்கிருக்கும் , நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் மனம் என்னும் ராட்சசனை கொல்வான் என்பது தான் இதன் உட்கருத்து இதனைத்தான் நாம் ஏழு மலை மேலேறி, திருமலையில் வெங்கடாசலபதியை வணங்கி வருகின்றோம் திருப்பதி பெருமாள் = ஆன்மா எவ்வளவு பெரிய சாதனையை – விஷயத்தை – சிறுவர் கதையாக சொல்லி உள்ளனர் நம் முன்னோர் ?? 2.அலிபாபாவும் 40 திருடர்களும் : இந்தக் கதையில் MGR , ஒரு காட்டிற்குச் செல்வார் – அங்கு ஒரு குகையைக் காண்பார் – ஒரு மந்திர வார்த்தையைக் கூறினால் , அது திறந்து விடும் – அதினுள்ளே சென்றால், செல்வங்கள் குவிந்திருக்கும் – அவர் அள்ளிக்கொண்டு வந்து பெரும் செல்வந்தன் ஆகிவிடுவார் கதையின் உண்மைப் பொருள் : குகை = நெற்றிக்கண் சுழிமுனை வாசலைத் திறந்தால் அதினுள்ளே, எல்லா செல்வங்களும் இறைவன் வைத்துள்ளான் – நம் இக மற்றும் பர வாழ்க்கைக்கும் இதனை தெரிந்து கொள்ளாமல் , நாம் நம் வாழ்க்கை முழுதும் இதனை சம்பாதிப்பதிலேயே செலவழிக்கின்றோம் கடைசியாக, MGR ம் , வில்லனும் ஒரு நூலான ஏணி யில் , அடியில் வென்னீர் ஆறு பாய , அதில் சண்டை போடுவார்கள் – இதில் நூல் ஏணி = மயிர்ப்பாலம் வென்னீர் ஆறு = நெருப்பாறு இந்த சூக்குமமான வார்த்தையை நம் சித்தர் பெருமக்கள் பயன்படுத்தி உள்ளனர் சித்தர் பாடல்களில் இவ்வார்த்தையை நாம் காணலாம் இந்த ஆற்றைத் தான் ” வைதரணி நதி ” என்று வேதங்கள் கூறுகின்றன இதனைக் கடந்து சென்றால் தான் ஆன்மாவிற்கும் / சிற்றம்பலம்/சிதம்பர வெளிகளுக்குள் நுழைய முடியும் இதனைத் தான் வள்ளலார் – ” இக்கரைக் கடந்திடில் அக்கரை இருப்பது சிதம்பரச் சர்க்கரை ” என்று பாடுகின்றார் வள்ளலாரின் – ஆறாம் திருமுறை – மெய்யருள் வியப்பு தனக்கு நிகரிங்கு இல்லாது உயர்ந்த தம்பம் ஒன்றே தாவிப் போகப் போக நூலின் தரத்தில் நின்றதே இங்கோர் மலையின் நடுவே உயர்ந்த தம்பம் நணுகவே ஏறிப் போகப் போக நூலின் இழைப் போல் நுணுகவே என்று நெருப்பாறு – மயிர்ப்பாலத்தின் அனுபவம் பற்றி பாடுகின்றார் நம் முன்னோர்களும் , ஆன்ம ஞானிகளும் , பேருண்மையை கதைகளாகவும் , பண்டிகைகளாகவும், திருவிழாவாகவும் சித்தரித்து , நாம் என்றுமே மறக்க முடியாதபடி செய்திருக்கின்றனர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.