Thursday, March 5, 2026

ஜீவர் பரிணாம வளர்ச்சி - உலகுக்கு மறைக்கப்பட்ட உண்மைகள்

அருட்பா உரை நடை ஜீவர் பரிணாம வளர்ச்சி - உலகுக்கு மறைக்கப்பட்ட உண்மைகள் வள்ளல் பெருமான் உரை நடையில் ; ஆதியில் உண்மை மறைத்துவிட்டவன் ஒருவன் என்று கூறியிருப்பார் என்னென்ன உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கு ?? 1 முதலில் முத்தி தான் இறுதி என உலகம் நினைத்தது பின் அதுக்கு மேலும் பலப்பல நிலைகள் இருக்கு என தெளிந்தது 2 இன்னமும் உலகம் / உலகத்துக்கு தத்தம் ஆன்மா தான் இறைவன் கடவுள் என்ற உண்மை தெரியாமலே வாழ்ந்து வருகின்றார் 3 சமய மத தெய்வங்கள் தான் இறுதி மேலான தெய்வம் அனுபவ நிலை என் நினைத்துள்ளனர் ஆனால் அவரெல்லாம் ஐந்து தொழில் செய் தலைவர்கள் என்ற உண்மை அறிந்தாரில்லை அவர் அபெஜோதிக்கு மிக மிக தாழ்ந்த நிலையில் உள்ளார் என்பதை உலகத்தார் மனம் ஏற்பதில்லை 4 வேதங்கள் உபநிடதங்கள் எல்லாம் பிரம்மம் வரை தான் பேசும் அதன் இறுதி கட்ட அனுபவம் அது தான் அதுக்கு மேலே இல்லை பிரம்மம் = ஆன்மா ஆனால் அனுபவம் அதுக்கு மேலும் உள இன்னும் 5 நிலைகள் கடந்தாகணும் 5 சமய மத உச்ச கட்ட அனுபவம் – திரையோதசாந்தம் மிக அதிகமாக இதை தத்துவ ராயர் முதலான ஞானிகளால் அனுபவிக்கப்பெற்ற நிலையில் அதன் மேல் சுத்த சன்மார்க்க / சுத்த சிவ சன்மார்க்கம் அனுபவம் ஆகும் 6 மரணம் தான் முடிவு அதுக்கு பின் மீட்டும் பிறவி இல்லை உயிர் சிவத்துடன் ஐக்கியம் என்று எண்ணியிருந்தது உலகம் மும்மலம் நீங்கா வரை இது நடவாத ஒன்று 7 குண்டலினி முதுகுத் தண்டின் அடியில் காய கல்பம் அச்வினி முத்ரையால் கைகூடும் துவாதசாந்தம் என்பது சிரசுக்கு மேல் 12 “ விள்ங்குது இதெல்லாம் உலகம் தவறாக செய்துள்ள கற்பிதங்கள் உண்மைக்கும் உலகத்துக்கும் ஒளி ஆண்டுகள் தூரம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.