Thursday, March 5, 2026

சுத்த சன்மார்க்கம் – ஒரு முழு ஆய்வு

சுத்த சன்மார்க்கம் – ஒரு முழு ஆய்வு I சுத்த சன்மார்க்கம் : என்ன வெனில் – எல்லா மார்க்கங்களையும், சமய, மதங்களைக் கடந்தும் ஆனால் அதன் எல்லா அனுபவங்களையும் தனக்கு பூர்வமாக்கி /அடக்கி அதன் மேல்/உத்தரத்தில் நிற்பது வாகும் இது எப்படி இருக்க்கின்றதுவெனில் – இந்தியாவில் IIT யில் B Tech , M Tech & Ph D பட்டம் பெறுவதும் . அப்படியெனில் , பத்தாம் வகுப்பு மற்றும் 10+2 படித்திருக்க வேண்டும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை அது போலத்தான், சுத்த சன்மார்க்கத்தின் முழுப் பரிமாணம் தெரிந்து கொள்ள / விளங்கிக் கொள்ள வேண்டுமெனில் , சமய – மதங்களில் பொதிந்துள்ள சூக்குமங்களையும் , இரகசியங்களையும் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும் 10 ஆம் வகுப்பு மற்றும் 10+2 படிப்பு = சமய மதங்கள் என்று வைத்துக் கொள்ளலாம் B Tech , M Tech படிப்பது = சுத்த சன்மார்க்கம் என்று வைத்துக் கொள்ளலாம் +2 படிக்காமல் , எப்படி B Tech படிப்பது சாத்தியம் இல்லையோ அது போலத்தான் சமய மதங்களில் உள்ள உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் சுத்த சன்மார்க்க நிலை அடைய முடியாது ஏன் எனில் , சமய மதங்களின் முடிந்த முடிபு மற்றும் இறுதியுமான அனுபவம் தான் சுத்த சன்மார்க்கம் ஆகும். சமய மதங்களின் படிகளின் இறுதிப் படி சுத்த சன்மார்க்கம் ஆகும் எந்த ஒரு படிப்பு அறிவும் இல்லாதவர்கள் திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தில் படிக்கலாம் – ஆனால் , அது தற்போது அங்கீகாரம் இழந்து விட்டது – அரசு பணிக்கும் அது ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை அப்படி யெனில் ஏன் வள்ளலார் சமய மதங்களைப் பின்பற்ற வேண்டாம் என்று கூறினார் என்றால் : அவைகள் முடிந்த முடிபை ” நேத்திரங்கள் போல் நேர் காட்டாவே ” என்று கூறுகின்றார் – எல்லாவற்றையும் மறைத்து மறைத்து கூறுகின்றது ஆனால் , அவைகள் பொய் இல்லை – வெளிப்படையாகக் கூறாமல் , மறைத்து கூறுவதனால் , இதனை கடைப் பிடிக்க வேண்டாம் என்று கூறுகின்றார் மேலும் , எல்லா சமய மதங்களும் ” ஆன்ம நிலை” வரையில் தங்கள் அனுபவங்களை விரித்து உரைக்கின்றன உதாரணம் : வைஷ்ணவம் – விஷ்ணு /பெருமாள் – ஆன்மாவைத்தான் குறிப்பிடுகின்றது இஸ்லாம் : ஆன்ம நிலை வரை அனுபவங்களை உரைக்கின்றது – ( MGR அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தைப் பார்த்து , அதில் உள்ள சூக்குமங்களை விளக்கிக் கொண்டால் , இதன் உண்மை விளங்கும் ) சீக்கியம் : பொற்கோவில் – ஆன்ம அனுபவம் விளங்கும் இடம் கிறிஸ்தவம் : இயேசு கிறிஸ்து – ஆன்மாவைத்தான் குறிப்பிடுகின்றது 5 சைவம் : இது மட்டும் ஆன்ம நிலையைத் தாண்டி , அனுபவங்களை எடுத்து உரைக்கின்றது ஆன்மா – துவாதசாந்தத்தில் – 12 வது நிலையில் உள்ளது சுத்த சன்மார்க்கம் – சுத்த துரியாதீதத்தில் – 17வது நிலையில் விளங்குகின்றது உண்மை இவ்வாறு இருக்க, சமய மதங்களில் உள்ள ரகசியங்களை அறிந்து , அதைக் கடைப்பிடித்து , சாதனையில் நடைமுறைப்படுத்தி குறைந்த பட்சம் ” ஆன்ம நிலை � வரை வளரலாம் இல்லையா ?? இப்படி செய்வது தான் புத்திசாலித் தனமும் கூட . ஆனால் , இதைச் செய்யாமல் , வள்ளலார் கூறியதை தவறாக புரிந்து கொண்டு, சமய மதங்களை ஒதுக்குவது என்பது அழகான செயல் அல்ல – அதனால் என்ன பயன் ??? – நட்டம் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்களுக்குத் தான் என்பதில் ஐயமில்லை அதனால் தான் வள்ளலார் என்ன சாதனை செய்து முத்தேக சித்தி பெற்றார் என்பதை அறிய முடியாமல் , ஜீவகாருண்யம் என்றால் ” சோறு போடுதல் ” என்று தவறாக பொருள் கொண்டு , அதையே செய்து கொண்டு , பெற வேண்டியதை பெறாமலேயே போகின்றார் ஆன்ம நிலை வரை வளர்வதற்கான சாதனைகளையும் – பயிற்சி படிமுறைகளையும் – � திருமந்திரம் – திருவாசகம் – திருவிளையாடற் புராணம் � மிக விளக்கமாக கூறுகின்றது திருச்சிற்றம்பலத்திற்குள் எப்படி நுழைவது என்பதிற்கும் இவைகள் வழி சொல்கின்றன – ஆனால் படித்து தெரிந்து கொள்ள ஆளில்லை ஆனால் , இவைகள் யாவும் � சமயம் சார்ந்தது � என்ற ஒரே காரணத்தினால் , சன்மார்க்க சங்கத்தவர்கள் இதனை ஒதுக்கித் தள்ளிவிட, சன்மார்க்க சாதனை என்ன என்பது தெரியாமலே இருளில் இன்னமும் இருக்கின்றது சன்மார்க்கம் = ஜீவகாருண்யம் = சோறு போடுதல் என்ற அளவில் சன்மார்க்கம் நிற்கின்றது என்பது வேதனைக்குரிய விஷயம். சன்மார்க்க சங்கத்தவர்கள் நிலை எப்படி இருக்கிறதுவென்றால் : ஒரு நோயாளி , கடையில் நேரடியாக மருந்தை வாங்காமல் ( சமயங்களின் உதவி ) , இல்லை , நானே மருந்தை கண்டுப்பிடித்து, உற்பத்தியும் செய்து , உட்கொள்ளுவேன் ( சுத்த சன்மார்க்கத்தை மட்டுமே சார்ந்து இருப்பது போன்று ) என்பது போல் இருக்கின்றது கடைசியில் நோயாளியின் கதி சொல்லித் தெரிய வேண்டியதில்லை 2.சந்தையில் கிடைக்கும் காய்கறிகளை நேரடியாக வாங்காமல் , இல்லை , இவைகள் எல்லாம் எனக்கு தேவை இல்லை , நானே நிலம் வாங்கி , உழுது, பயிர் செய்து , காய்கறிகளை விளைவித்து உண்பேன் என்று கூறுவதற்கு ஒக்கும் நல்ல வேடிக்கை. ஆன்மாவை மறைத்துக் கொண்டு பல திரைகள் உள்ளன – இவைகள் சுத்த உஷ்ணத்தினால் மட்டுமே விலக்க முடியும் என்றும் வள்ளலார் கூறுகின்றார். இந்த திரை விலக்குவதற்கான / எரிப்பதற்கான வழியை இராமாயணம் விளக்குகின்றது – இந்த இதிகாசத்தை நன்கு ஆய்ந்தால் , ஓரிடத்தில் இது விளக்கப் பட்டிருக்கின்றது இராமாயணம் நம் ஆன்ம தரிசனத்திற்கு வழி காட்டுகின்றது என்பது உண்மை II சுத்த சன்மார்க்க சாதனம் : சாதனையா ?? சன்மார்க்கத்தில் இல்லவே இல்லை என்று தான் எல்லோரும் கூறுவார்கள். ” கருணை ” தான் சாதனம் என்று வள்ளலார் கூறியிருக்கின்றார் என்று கூறுவர் – அதனால் யோகா – தியானம் அதெல்லாம் இங்கு கிடையவே கிடையாது என்று அடித்து கூறுவர் ” கருணை ” யின் உண்மைப் பொருளை அறியாமலே , தானும் கெட்டு , தவறான வழியில் போய் , பிறரையும் கெடுத்து , தவறாக வழி காட்டுகின்றார்கள். அப்படியெனில் , நீங்கள் என்ன தான் செய்வீர்கள் என்று கேட்டால் : அதற்கு , நாங்கள் ” சோறு போடுவோம் ” – ஏழைகளுக்கு படிப்பிற்கும் , மருத்துவத்திற்கும் உதவி செய்வோம் என்று கூறுவர் . இது தான் சமூக சேவை – மக்கள் சேவையே மகேசன் சேவை என்றும் கூறுவர். இது தான் நாங்கள் பிற உயிர்களுக்கும் காட்டும் இரக்கம் – இந்த அன்பு மூலம் நாங்கள் இறைவனை அடைவோம் என்பர். இது எப்படி இருக்கிறதுவென்றால் : உயர் மட்டத்து பணக்கார சீமாட்டிகள் , வீட்டிலே புருஷனையும் / பிள்ளைகளையும் கவனிக்காமல் , வெளியில் சென்று சேரியிலும் , குப்பத்திலும் ஏழைகளுக்கு உதவி செய்வர் – நகைப்பிற்குரியது. மேலும் , தன் உயிர் எப்படி இருக்கின்றது ,அதன் நிலை என்ன , அதை அடைவது எப்படி , அதனை கடைத்தேற்றுவது எப்படி என்று அறியாதவன் , பிற உயிர்களுக்கு உதவி செய்வது என்பது தான் அன்பு / கருணை என்று கூறுவது முற்றிலும் அறியாமையே. � தவத்தினால் தான் அன்பு மற்றும் கருணை என்ற நிலைக்கு வருவோமே அல்லாது பிற உயிர்களுக்கு உதவி செய்வதினால் அல்ல � என்ற உண்மையை சங்கத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில உதாரணங்கள் : இந்தியாவின் விப்ரோ நிறுவன அதிபர் 8000 கோடி ரூபாய் , கல்வி நிதியாக கொடுத்தார். உலகின் மிகப் பெரிய பணக்காரர் – கார்லோஸ் – 2 இலட்சம் கோடி மக்கள் நலனுக்காக நிதி உதவி செய்தார் Micro Soft Bill Gates தன் சொத்து பெரும் பங்கு சமூக சேவைக்கு செலவிடுகின்றார் . இவர்கள் ஆற்றியது உலகின் மிகச் சிறந்த உதவி தான் , ஜீவகாருண்யம் தான் – அதனை மறுப்பதற்கில்லை – ஆனால், இதனால் இவர்கள் முத்தேக சித்தி பெறுவார்களா ?? திருச்சிற்றம்பலத்தில் நுழைவார்களா ?? மரணமிலாப் பெருவாழ்வு பெறுவார்களா ??? எனில் – இல்லை பெற மாட்டார்கள் ஏன் ?? ஏனெனில் , �தான் யார் என்ற ஆன்ம அறிவு � இன்னும் இவர்களுக்கு இல்லை – எனவே இவர்கள் மேற்கூறிய ஆன்ம லாபத்தைப் பெற மாட்டார்கள் என்பது திண்ணம். பின் இவர்கள் ஆற்றிய உலகின் மிகச் சிறந்த உதவிக்கு உலகம் செய்யும் கைம்மாறு தான் என்ன என்று வினவினால் ?? ” புண்ணியவான் ” ” கொடை வள்ளல் ” (Philanthrophist – MGR ) போன்று நற்பெயர்களும் உலகம் வழங்கும் அண்மையில் இந்தியாவின் இருவருக்கு ” புனிதர் ” பட்டம் கொடுக்கப்பட்டது அல்லவா ?? அது தான் கிடைக்கும் � தான் யார் என்ற ஆன்ம அறிவு � தான் மேற்கூறிய ஆன்ம லாபத்தை அளிக்குமே அல்லாது , எவ்வளவு சமூக நலப் பணிகளும்/ ஜீவகாருண்யச் செயலைச் செய்தாலும், அது பலனை கொடுக்காது ஏனெனில் , கருணை = ஆன்மா அன்பு = ஆன்மா ஒரு நாள் முழுதும் உழைத்தால் , ஒரு நாள் கூலி – 200-300 ரூபாய் கிடைக்கின்றது . இந்தக் கூலிக்கே இவ்வளவு உழைக்க வேண்டியிருக்கின்றதுவெனில் – மரணமிலாப் பெருவாழ்விற்கும் – முத்தேக சித்திக்கும் எவ்வளவு உழைப்பு வேண்டியிருக்கும் என்பதை சங்கத்தவர்கள் யோசிக்க வேண்டும் பனிரெண்டு ஆண்டு தொடங்கி இற்றைப் பகல் வரையுமே – பாடல் நோக்க ஈறாறு ஆண்டு தொடங்கி இற்றைப் பகல் வரையுமே – மெய்யருள் வியப்பு – பாடல்கள் சோறு போடுவதால் மட்டுமே இந்தப் பெரிய நிலையை வள்ளலார் அடைந்திருந்தால் , இந்த வரிகளை ஏன் எழுத வேண்டும் ?? நம்மவர்கள் நோகாமல் நோன்பு நோற்க ஆசைப் படுகின்றனர் – அதனால் தன் தவம் – தியானம் – யோகம் இதெல்லாம் தேவையில்லை – இவைகள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாது ( Good for nothing ) என்று கூறி வருகின்றனர். BG வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.