Thursday, March 5, 2026

மகாதேவ மாலை - சன்மார்க்க விளக்கம்

மகாதேவ மாலை - சன்மார்க்க விளக்கம் மகாதேவர் என்றவுடன் நம் சன்மார்க்க அறிவாளிகள் ருத்திர மகாதேவர் குறிக்க வருது எனவே இதெல்லாம் சமயம் மதம் சார்ந்தது – ஆறாம் திருமுறையில் வள்ளலார்க்கு சன்மார்க்கம் புலப்பட்டது என அவர் மனதுக்கு தோன்றியபடி எலாம் உளறி வருகிறார் இது முதல் திருமுறையிலேயே பாடி முடித்துவிட்டார் அப்படி எனில் அவர் அறிவு அந்த காலத்திலே சுடர் விட்டு பிரகாசித்துக்கொண்டிருந்தது என்பதுண்மை இந்த மகாதேவர் என்பது தேவாதி தேவர்கள் மூவர் குறிக்க வரவிலை அது சுத்த சிவம் நடராஜர் அபெஜோதி குறிக்க வருது மகாதேவ மாலை இந்தியமாய்க் கரணாதி அனைத்து மாகி இயல்புருட னாய்க்கால பரமு மாகிப் பந்தமற்ற வியோமமாய்ப் பரமாய் அப்பால் பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை யாகி வந்தஉப சாந்தமதாய் மவுன மாகி மகாமவுன நிலையாகி வயங்கா நின்ற அந்தமில்தொம் பதமாய்த்தற் பதமாய் ஒன்றும் அசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே இதில் 1 பர வெளி பரம்பர வெளி பராபர வெளி 2 மகாமௌனம் 3 மேலைப்பர விந்து இயற்பர நாதம் என்ற மாபெரும் விளக்கம் / அனுபவ நிலைகள் பத்தி பாடுகிறார் அதெலாம் 36 தத்துவம் தாண்டிய அரும் பெரும் பரசிவ வெளி அனுபவம் சுத்த சன்மார்க்கம் தாண்டிய சுத்த சிவ சன்மார்க்கம் தழைத்தோங்கும் வெளிகள் ஆம் ஆகையால் உலகத்தை நம்பக் கூடாது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.