Thursday, March 5, 2026

எது சரி – எதை பின்பற்றுவது ?? பாகம் 2

எது சரி – எதை பின்பற்றுவது ?? பாகம் 2 எப்படி ஒரு பெண்ணுக்கு நகை புடவைகள் தேர்ந்தெடுக்க அனேக கடைகள் உளதோ ?? அவ்வாறே ஒரு சாதகனுக்கும் அனேக யோக சாலைகள் – குடில்கள் உள்ளன நீண்ட பட்டியல் 1 சன்மார்க்கம் – சோறு மட்டும் போடுதல் – தவம் கிடையா 2 சன்மார்க்கம் – தவம் – கண் மூடி செய்தல் 3 சன்மார்க்கம் – கண் திறந்து – செல்வராஜ் குழு 4 சன்மார்க்கம் – கண் திறந்து – உலக பொது வழி 5 வாசி குழு – சித்த வேதம் 6 குண்டலினி – வேதாத்ரி 7 சாலை -குழு 8 நிகழ் காலத்தில் வாழ்தல் 9 ஈஷா – ஜக்கி 10 ஒஷோ – Dynamic meditation 11 Mahesh Yogi – Transcendental meditation 12 Art of Living Sri Sri Sri 13ஹட யோகம் 14 லம்பிகா யோகம் இப்படி நீள பட்டியல் இருக்க – ஒருவன் எதை எப்படி தேர்வு செய்ய முடியும் ?? பதில் : 1 எது இறுதி வரை கூட்டிச் செல்லுமோ அந்த சாதனம் தான் சரியானது – பின்பற்ற வேண்டியது சுத்த சன்மார்க்கம் தான் இறுதியாம் ” சிற்றம்பலம் – 17 வது நிலை சுத்த சிவ துரியாதீதம் ” சேர்க்கும் – மற்றெலாம் இடையில் நின்று போம் அதாவது ஆன்ம நிலையோடு முடிந்து போம் மற்ற எல்லா முறைகளும் சமாதியில் முடிந்துபோம் – வாசி போல் – குண்டலினியில் முடிந்து போம் – வேதாத்ரி முறை சாலை அனுபவம் – ஆன்மா வரையில் தான் 2 எப்படி எல்லாப்பொருளும் ஒரு குடையில் வாங்குவது எளிதோ – நமக்கு வசதியோ அவ்வாறே எந்த யோகம் பயின்றால் – அதில் எல்லா யோகமும் அடக்கமோ அது சிறந்த பயிற்சி சுத்த சன்மார்க்கம் தான் – இதன் சாதனத்தால் வரும் அனுபவத்தில் எல்லா மற்ற யோக அனுபவமும் அடக்கம் – அடங்கும் இதில் 1 வாசி உருவாகும் – வாசி யோகம் 2 குண்டலினி அசைந்து வழி விடும் – பர வெளிக்கு – வேதாத்ரி குண்டலினி யோகம் 3 சூரியனும் சந்திரனும் சேர்ந்துவிடும் – ஹட யோகம் 4 பரியங்க யோகம் சித்திக்கும் 5 அமுதம் கிடைக்கும் – சந்திர யோகம் – 6 நிகழ் காலத்தில் வாழ வைக்கும் 7 ஆழ் நிலைக்கு இட்டுச்செல்லும் – மகேஷ் யோகி 3 எந்த யோக முறையிலும் ஒளி தேக அனுபவம் இல்லை – சுத்த சன்மார்க்கத்தில் தவிர எனவே சுத்த சன்மார்க்க நெறி தான் சிறந்த யோகம் – பயிற்சி ஆகும் – இது தான் மரணமிலாப்பெரு வாழ்வு தரும் – மீண்டும் வாரா நெறிக்கு இட்டுச்செல்லும் மற்றவைகள் போக்கு வரத்து உடையதாய் நிற்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.