Tuesday, March 3, 2026

ராஜ ராஜ சோழன் தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய அரும் பெரும் தொண்டு “

ராஜ ராஜ சோழன் தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய அரும் பெரும் தொண்டு “ உண்மை சம்பவம் - 1000 ஆண்டுக்கு முன் பாலகுமாரன் – உடையார் நாவல் அடிப்படையாக கொண்டு இந்த பதிவு அப்போது சேர அந்தணர் முன் குடுமி சோழியர் ( கேரள நம்பூதிரி ) சிதம்பரம் கோவிலை ஆக்கிரமித்திருந்த காலம் இப்போதும் அவர் கையில் தான் அவர்கள் திருச்சி தஞ்சை விட்டு அங்கு குடி பெயர்ந்திருந்த காலம் அங்கும் மாயவரம் சுற்றி இருந்த நிலம் வாங்கி செல்வம் கொழித்திருந்த காலம் அவர்கள் நால்வர் உட்பட 63 நாயன்மார் சிலைகளையும் அவர் தம் பாடிய 12 திருமுறை பதிக ஏடுகளை எல்லாம் பூட்டி வைத்து அவர் தம் சமஸ்கிருதத்தில் பூஜை செய்து வந்த காலம் அப்போது நம்பியாண்டார் நம்பி என்ற அடியவர் எல்லா மறை ஏடுகளையும் சேகரிக்கும் பணி செய்து வந்தார் அவர் தமிழ் நாடெங்கும் சுற்றி இந்த திருப்பணி செய்து வந்தார் இதை அறிந்து வைத்திருந்தார் பஞ்சவன் மாதேவி என்ற நாட்டியம் ஆடும் பெண் இவர் தான் ராஜ ராஜ சோழனின் கடை மனைவி இவர் ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் ஒரு தேவாரப் பதிகம் பாட , அதில் மெய்சிலிர்த்துப் போன ராஜ ராஜ சோழன் , அவர் தம் உதவி நாடி , பதிகங்கள் மீட்டெடுக்கும் பணி மேற்கொண்டார் 63 வரும் அவர் தம் பதிகங்களும் கரையான் அரிக்கவைத்துவிட்டார் இந்த மாபாதகர்கள் ஒரு அறையில் இருப்பதை வேவு பார்த்து அறிந்து கொண்டு , அதை இரவோடு இரவாக வெளி எடுத்தவுடன் , அந்தணர்கள் கோபம் கொண்டு , இது யார் செய்தது என கேட்க , நான் தான் என ராஜ ராஜ சோழன் பதில் கூற அந்தணர் : ஏன் இந்த நேரத்தில் ?? இறைக்கு கோபம் வந்துவிடும் ரா ரா சோழன் : எந்த நேரமாக இருந்தால் என்ன ?? ஏன் இவரை அறையில் இவர் பதிகங்களை கரையான் அரிக்க வைத்துள்ளீர்கள் ?? அந்தணர் : இவரா ?? இதெல்லாம் பொம்மைகள் ?? எவ்வளவு ஆணவம் ?? ரா ரா சோழன் : அப்படி எனில் ?? உள்ளே இருப்பதுவும் நடராஜரும் பொம்மை தான் அந்தணர் : இந்த பாடலில் என்ன இருக்கு ?? எங்கள் வேதம் ருக்கு வேதம் தான் எல்லாத்துக்கும் அடிப்படை ரா ரா சோழன் : வேண்டாம் விவாதம் – மீறினால் சோழ அரசு தன் கடமையை செய்யும் என்றவுடன் அவர் பின் வாங்கி விட்டதாகவும் வரலாறு கூறுது இப்படித் தான் நால்வர் // 63 நாயன்மார் உலகுக்கு அறிய வந்தனர் அவர் பதிகங்கள் உலகுக்கு கிடைத்தது ரா ரா சோழன் இல்லையெனில் நாயன்மார் பதிகங்கள் நமக்கு கிடைக்காமலே போயிருக்கக்கூடும் இப்படித் தான் தமிழை அந்தணர்கள் திட்டமிட்டே அழித்து அவர் தம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தனர் இன்றளவும் தமிழை இந்த சமூகம் மதிப்பதேயிலை தமிழ் – நீச மொழி என்றே அழைக்கின்றார் தமிழ் பெருமை அறியா மற்றவர் : தமிழ் ஒரு காட்டு மிராண்டி மொழி என பேசினான் ஒருவன் திருக்குறள் : தங்கத் தட்டிலே வைத்திருக்கும் மலம் என்றது ஒரு ஈனப் பிறவி ஆக தமிழுக்கு ஒன்றிரண்டு அல்ல பகைவர்கள் – நிறைய நிறைய சுற்றியுள்ள எல்லா அண்டை மாநிலத்தவரும் அவர் மொழிகள் – குறிப்பாக தெலுங்கு இன்றளவும் தமிழுக்கும் அந்தணர்க்கும் மத்த மொழிக்கும் போர் நடந்து கொண்டு தான் இருக்கு தமிழ் தமிழ் என வாயால் கூறி வாழ்ந்து கொண்டு அதை அழித்துக்கொண்டிருக்கார் மக்கள் அரசியல்வாதிகள் ( அரசியல்வியாதியினர் ) தமிழர் மாடல் என கூறுவதிலை இவர்கள் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.