கும்பமேளா – சன்மார்க்க விளக்கம்
1 இந்த நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றது - இது 12 வருடத்துக்கு ஒரு முறை காசி - பத்ரிநாத் - நாசிக் போன்ற நகரங்களில் கொண்டாடப்படுகின்றது
கும்பம் – பிரணவ கும்பம் குறிப்பது
அது 9 சூக்கும ஒளிகள் கலவை
மேலும் அது சோமசூரியாக்கினி கலைகள் சங்கமம் குறிப்பதும் ஆகும்
இதை தவத்தால் இந்த கும்பம் அமைக்கும் போது , இந்த மூன்று நதிகள் ஆம் மூன்று நாடிகளை தவத்தால் சுழியில் சேர்க்கும் போது , அது பல நன்மைகள் பிரமாண்டமான விளைவுகள் ஏற்படுத்தும் வல்லைமை உடைத்து
அதில் ஒன்று தான் நம் பாவங்கள் நீக்குவது
அதனாலே தான் நம் பாரத மக்கள் இந்த நாளிலே நீராடி வருகின்றார்
உண்மையில் சிரசில் சோமசூரியாக்கினி கலைகள் சங்கமம் பாவங்கள் போக்கும்
இதைத் தான் புறத்திலே சடங்காக காட்டியுள்ளார் நம் முன்னோர்
இதை விமர்சிக்கும் எதிரிகள் குறிப்பாக கிறித்தவ முஸ்லிம்கள் – இந்த நீரின் சுத்தத்தை கருத்து முன் வைக்கின்றார்
ஒன்றை கவனித்தில் கொள்ள வேண்டும்
அதாவது கங்கை ஆனது – சாதாரண நீரில் காட்டிலும் 25000 மடங்கு கிருமி நாசினி உடையது என அறிவியல் ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது
அதனால் கூட நம் முன்னோர் கோடிக்கணக்கான மக்கள் நீராடினாலும் , தவறில்லை , ஆரோக்கியத்துக்கு பங்கம் இல்லை
2 ஏன் 12 வருட இடைவெளி ??
ஏனெனில் ஒரு சாதகனுக்கு தன் சாதனை மூலம் " பிரணவ கும்பம் " அமைத்து ஆன்ம அனுபவம் கிடைக்க குறைந்த பட்சம் 12 ஆண்டுகள் தேவைப்படும்
இதை உணர்த்தத் தான் 12 ஆண்டுகள்
மேலும் இந்த உண்மையை பறை சாற்ற மேலும் சில இயற்கையின் வெளிப்பாடு
12 ஆண்டு முறை பூக்கும் குறிஞ்சி மலர்
குறிஞ்சி மலர் = ஆன்மா அமுத அனுபவம் கலசம்
மணிமேகலை இதிகாசத்தில் 12 ஆண்டு ஒரு முறை கனி கொடுக்கும் ஒரு அதிசய அற்புத மரம் -
அக்கனி சாப்பிட்டால் பசி போய்விடும் - 12 ஆண்டுக்கு பசி எடுக்காது
கனி = ஆன்ம அனுபவம் - இந்த அனுபவம் வந்துவிட்டால் பசி இருக்காது - எடுக்காது
" ஈறாறாண்டில் ஒரு கனி தருவது
அக்கனி உண்டோர் மக்கள் யாக்கையின் வரும்பசி நீங்குவர் "
சீத்தலை சாத்தனார்
விந்துவிடா வாழ்வாம் பிரமச்சரிய தவ சாதன வாழ்வு ( திருமணமாகா வாழ்வு அல்ல ) - 12 ஆண்டுகள்
ஒரு சாதகன் குறைந்த பட்சம் 12 ஆண்டுகள் தீவிரமாக பயிற்சி செய்தால் , அவன் ஒரு நிலைக்கு வரலாம் - அனுபவத்துக்கு வரலாம் - பிரணவம் அமைக்க குறைந்தது 12 ஆண்டுகள் ஆகும்
நாம் தினம் செய்வது போல் 1/2 மணி - 1 மணி நேரம் அல்ல - தீவிர பயிற்சி குறிப்பிடப்படுவது
இதை உணர்த்தத் தான் இந்த 12 வருட கணக்கு
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.