Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, March 8, 2026
ஞானியர் உலக மயம் - அமுதம் பெருமை
ஞானியர் உலக மயம் - அமுதம் பெருமை
“ போகரும் மணிமேகலையும் “
போகர் :
ஒரு சித்தர், போகர் மீது பெரும்கனிவு கொண்டு, ‘அமிர்தமணிப்பழம்‘ என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார்
அதை உண்டால் ஆயுள்முழுக்கப் பசிக்காது, நரைக்காது,
முதுமை உண்டாகாது…
இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிடப் போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய ‘பசி, தாகம், மூப்பு‘ என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்…
விளக்கம் :
அமிர்தமணிப்பழம்‘ என அப்படி ஒரு பழம் உலகத்தில் இல்லவே இலை
அது அமுதம் குறிப்பதாகும்
அமுதத்தை கனி என உருவகம் செய்து இருக்கார் மக்களுக்கு பாமரர்க்கு
மணிமேகலை – கதையும் உண்மையும்
சீத்தலைச் சாத்தனார் –
காய சண்டிகை – தன் கணவர் விஞ்ஞையன் – காவிரிப்பூம்பட்டினம் வருகை – விருச்சிக முனிவர் – 12 வருடம் ஒரு கனி தரும் அற்புத மரம் – அது 12 ஆண்டுக்கு பசி நீக்கும் வல்லமை உடையது
அந்தக் கனியை காய சண்டிகை அழித்தல் – அதனால் அவள் சாபம் அடைதல்
மணிமேகலையிடம் உணவு உண்ணல் – அமுதசுரபி உணவு உண்ணல் – சாபம் நீங்கல்
இது கதை
இதன் உண்மை தத்துவம் என்ன??
எங்காவது ஒரு கனி 12 வருடத்துக்கு பசி நீக்குமா ??
ஒரு வரியில் பதில் : ஒரு ஜீவன் ஆன்மாவாக மாறுவதும், வாதம் ஆவதும் தான் உண்மைத் தத்துவம் அதனால் அதன் பயனால் பசி தாகம் காமம் கடத்தல்
12 ஆண்டுக்கு ஒரு மு்றை கனி தரும் மரம் = அதாவது அளவற்ற காலம் தவம் செய்து – பிரணவ மரம் அமைத்து
அதில் ஆன்மா எனும் அமுதம் எனும் கனி தருவிக்க வேண்டும்
மரம் = பிரணவ மரம் – தவம் செய்து அமைக்க வேணும்
கனி = அமுதம்
ஜீவன் ஆன்மாவாக வாதமாக வேண்டும் என்ற ஒரு வரிக்கு இத்தனை பெரிய கதை சொல்லப்பட்டிருக்கு
இது உண்மையில் நடந்திருக்க வாய்ப்பிலை
இது தத்துவத்தை விளக்க வந்த கதை புராணக்கதை –
அவ்வளவே
இந்த அமிர்தமணி பழமும் – காய சண்டிகை கதை வரும் பழமும் ஒன்றே தான்
அமுதம் தான் கனி
ஞானியர் கருத்து ஒருமித்து தான் போவர்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.