Sunday, March 8, 2026

மணிமேகலை – கதையும் உண்மையும்

BG Venkatesh / May 28, 2018 மணிமேகலை புதிரின் பதில் இதோ மணிமேகலை – கதையும் உண்மையும் சீத்தலைச் சாத்தனார் – காய சண்டிகை – தன் கணவர் விஞ்ஞையன் – காவிரிப்பூம்பட்டினம் வருகை – விருச்சிக முனிவர் – 12 வருடம் ஒரு கனி தரும் அற்புத மரம் – அது 12 ஆண்டுக்கு பசி நீக்கும் வல்லமை உடையது அந்தக் கனியை காய சண்டிகை அழித்தல் – அதனால் அவள் சாபம் அடைதல் மணிமேகலையிடம் உணவு உண்ணல் – அமுதசுரபி உணவு உண்ணல் – சாபம் நீங்கல் இது கதை இதன் உண்மை தத்துவம் என்ன?? எங்காவது ஒரு கனி 12 வருடத்துக்கு பசி நீக்குமா ?? இதன் தாத்பரியம் கூறவும் இது மனித வயித்துப்பசி பற்றியதல்ல – இது ஜீவனின் ஆசைப்பசி பற்றியது ஒரு வரியில் பதில் : ஒரு ஜீவன் ஆன்மாவாக மாறுவதும், வாதம் ஆவதும் தான் உண்மைத் தத்துவம் அதாவது காய சண்டிகையின் தீராப் பசி – யானைப்பசி நோய் = நம் ஜீவனின் தீரா ஆசைப்பசி ஆகும் அது தீருவது அமுதசுரபியின் அன்னத்தால் = ஆன்மாவாக வாதம் ஆனால் நம் ஆசைகள் ஒழியும் – ஆன்மாவுக்கு ஆசை கிடையா அதனால் இவ்வாறு புனையப்பட்டுள்ளது 12 ஆண்டுக்கு ஒரு மு்றை கனி தரும் மரம் = அதாவது அளவற்ற காலம் தவம் செய்து – பிரணவ மரம் அமைத்து அதில் ஆன்மா எனும் கனி தருவிக்க வேண்டும் மரம் = பிரணவ மரம் – தவம் செய்து அமைக்க வேணும் கனி = ஆன்மா ஜீவன் ஆன்மாவாக வாதமாக வேண்டும் என்ற ஒரு வரிக்கு இத்தனை பெரிய கதை சொல்லப்பட்டிருக்கு இது தத்துவத்தை விளக்க வந்த கதை கட்டுக்கதை – அவ்வளவே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.