Sunday, March 8, 2026

ஆஹாரமும் உணவும் “

ஆஹாரமும் உணவும் “ நாம் உண்ணும் உணவு சிறிது கணத்துக்கு தான் மீண்டும் பசி எடுக்கும் மீண்டும் சாப்பிட வேணும் இது உலக நியதி ஆனால் மேல் உலக நியதி வேற அது அந்த உணவு ஒரு முறை உண்டால பல்லாண்டுகளுக்கும் பசி எடுக்காது அது ஞானியர் உணவு சாந்தோக்கிய உபநிடதம் : ஆஹார சுத்தௌ ஸத்வ சுத்தி ஸத்வ சுத்தௌ த்ருவா ஸ்ம்ருதி:| தூய உணவு தூய மனத்தையும், தூய மனம் இடையீடற்ற இறைநினைவையும் தோற்றுவிக்கின்றன. ஆனால் ஆதிசங்கரர் "ஆஹாரம்" என்பதற்கு யோக உணவு - அதாவது குரு பிரான் அருளும் ஆன்மாவிற்கான அமிர்த வர்ஷிப்பு எனப் பொருள் கொள்கிறார். 2 இயேசு : "நான் குறிப்பிடும் உணவை உண்பவன் சாகான். இதற்காகவே இவ்உணவு வானின்று இறங்கியது. நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு" என்று ஏசுபிரான் சத்திய வேதத்தில் குறிப்பிட்டுள்ளார். 3 மணிமேகலை : விருச்சிக முனிவன் சாப்பிடும் அரும்பெரும் கனி உண்டால் 12 ஆண்டுக்கு பசி நோய் தீரும் இது மாதிரி இருக்கும் ஞானியர் உணவு இது ஆன்மாவில் இருந்து பெறும் அமுதம் – அது தான் சாகாமருந்து வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.