Tuesday, March 3, 2026

கீழ் பச்சைத்திரையும் சாகாக்கல்வியும்

“ கீழ் பச்சைத்திரையும் சாகாக்கல்வியும் “ உரை நடை : திரையோதச நிலைகள் – பூத நிலை கரண நிலை முதல் திருவருள் நிலை ஈறாக மேலும் வர்ணமாகிய எழுத்தாலும் வண்ணமாகிய ரூபத்தாலும் தொழிலாகிய பேராலும் இவைகள் அனந்தமாக விரியும் “ இவைகள் ராகமென்ற திரை நீங்கில் ஒருவாறு தோன்றும்” " இவைகள் படிப்பால் அறியக்கூடாது " பின் எப்படி ?? ஒழுக்கம் நிரம்பி கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கற்பம் உண்டானால் நமக்கு தாழுங்குணம் வரும் அத்தருணத்தில் அருட்சத்தி – சத்தினிபாதம் நம்மில் பதிந்து அறிவு விளங்கும் ஆதலால் இடைவிடாது நன்முயற்சியில் ஈடுபட வேண்டும் ஆக , கீழ் பச்சைத்திரை தவத்தால் அதன் உஷ்ணத்தால் விலக விலக , அருள் பதிய சாகாக்கல்வி ஞானம் விளையும் என்றவாறு இந்த திரை விலக்கம் பலப்பல தெளிவு விளக்கம் அளிக்கும் என்பது உறுதி
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.