Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
ஆண்டாள் பாசுரம் – வாரணமாயிரம் – ஓர் சன்மார்க்க பார்வை “
ஆண்டாள் பாசுரம் – வாரணமாயிரம் – ஓர் சன்மார்க்க பார்வை “
” ஆண்டாள் பாசுரம் – வாரணமாயிரம் – ஓர் சன்மார்க்க பார்வை ”
” திருமணக் கனவை உரைத்தல் ”
1 வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
2 நாளை வதுவை-மணம் என்று நாள் இட்டு
பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்
3 இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மண-மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
4 நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
பூப் புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்
காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
5 கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்
சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்
6 மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
7 வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து
காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி
தீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்
8 இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்
9 வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்துப்
பொரிமுகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
10 குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
11 ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே
இது ஏதோ ஆண்டாள் தன் உலகத்தவர் நினைக்கும் திருமண ஆசையை உரைத்ததாக கருதுவது பேதைமை – முழுதும் பேதைமை ஆகும்
இது தாம் ஞானி என்ற நிலையில் இருந்து தான் ஆன்மா ஆகிய ரங்கனிடம் கலக்க வேண்டும் என்ற தன் எண்ணத்தையும் தான் அடைந்த – அடையப்போகும் அனுபவத்தையும் எடுத்துக்கூறும் அருட் பாடல் ஆம்
உ ம்
1 பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
விளக்கம் : இது தான் பிரணவத்தை அமைத்து விட்டதை உறுதி செய்வதாகும்
பூரண பொற்குடம் = பிரணவம் – 9 ஒளிகள் கலவை ஆம்
சாதனம் மூலம் இதை உண்டாக்கிவிட்டதை இங்கே தெரியப்படுத்துகிறார்
2 காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
விளக்கம் : அதாவது ஆன்மாவின் பொன்னொளி தன் மேனியில் கலந்ததை இங்கே தெரியப்படுத்துகிறார்
காப்பு = பொன் கங்கணம் ஆம் – அது ம ஞ்சள் ஒளி ஆகிய ஆன்ம ஒளி
3 கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
விளக்கம் :
கை = சுழுமுனை அனுபவம் சித்தித்து விட்டதை இங்கே உறுதிப்படுத்துகிறார் ஆண்டாள்
தான் சுழுமுனை உச்சி அடைந்துவிட்டதை இங்கே உறுதிப்படுத்துகிறார்
இதெல்லாம் தான் பெறப்போகும் ஆன்ம அனுபவம் தானே அன்றி பெருமாளுடன் தனக்கு நடக்கப்போகும் திருமண வைபவம் குறிக்கவிலை
தான் ஆன்மாவாக ஆக வாதம் ஆகப்போகும் அனுபவ உரை கவி தான் வாரணம் ஆயிரம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.