Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
பிரம்மாஸ்திரம் – சன்மார்க்க விளக்கம்
பிரம்மாஸ்திரம் – சன்மார்க்க விளக்கம்
பிரம்மாஸ்திரம் = ஆன்ம ஒளி என்று பொருள்
பிரம்மாஸ்திரம் – இதனை விக்னானிகள் ( scientists ) அணு ஆயுதம் என்றே விளக்கி வருகின்றனர்
ஆன்மாவும் அணு தான்
இந்த அஸ்திரத்தைக் கொண்டு தான் ஸ்ரீ ராமன் இராவணனை வதம் செய்தான் என்பது இதிகாசம்
இதன் பொருள் யாதெனில் – ஸ்ரீ ராமன் ( ஜீவன் ) ஆன்ம ஒளியை வீசச் செய்து மனதையும் அதன் மலங்களையும் திரைகளையும் வென்றான்/கொன்றான் என்பது தான்
இது நடைபெறும் இடம் சுழிமுனை உச்சி ஆகும்
வெங்கடேஷ்
“ கொள்ளி – சன்மார்க்க விளக்கம் “
பிணத்துக்கு இதை வைத்து மகன் தகனம் செய்வான்
சரி இதுக்கு ஏன் இந்தப் பேர் ?? இந்த சடங்கு ??
கொள்ளி எனில் முத்தீ / விந்து சுத்த உஷ்ணம்
அதாவது இதை வைத்து எரித்துவிட்டால் , இறந்தவரின் மும்மலமும் நீங்கி ஞானம் அடைந்துவிட்டதாக உலகுக்கு காட்டுவதுக்காக இந்த சடங்கு
உண்மையில் இந்த அரும்பெரும் நிலை / அனுபவத்தை அவர் அடையவிலை எனினும் – இந்த மாதிரி நடந்தால் , ஒருவர்க்கு மும்மலமும் நீங்கி ஞானம் அடைவர் என்ற மாபெரும் உண்மை உலகுக்கு உணர்த்தவே இந்த சடங்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.