Thursday, March 5, 2026

பத்து   பரிமாணங்கள் வெளிகள் விளக்கம் – முப்பத்தாறு தத்துவம் / தத்துவ வெளி ஒப்பீடு

பத்து   பரிமாணங்கள் வெளிகள் விளக்கம் – முப்பத்தாறு தத்துவம் / தத்துவ வெளி ஒப்பீடு     பதி விளக்கம் -  அருட்பா ஆறாம் திருமுறை   வண்ணமிகு  பூதவெளி பகுதிவெளி முதலா வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல் இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய் அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய் அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த் திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்  விளக்கம் :   1 பூதவெளி பகுதிவெளி முதலா வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி  அதாவது  ஐந்து பூதங்கள் – நிலம் நீர் தீ காற்று ஆகாயம் தனித்தனி  பகுதி வெளிகள் தான் வயங்கு வெளிகள் ஆக நிற்கிறது  இவைகள் தான்  முதல் மூன்று பரிமாணம்  - நீளம் அகலம் உயரம்   Length Breadth and Height  2 அதன் மேல் மனம் - மா மௌன வெளி – இது 4 /5 பரிமாணம் – காலம் வெளி பரிமாணம்  Time and Space இதை தத்துவங்களுடன் ஒப்பிடுகையில் – முப்பத்தாறு தத்துவங்களும் அதை அடக்கிய வெளிகளாம் 1 உயிர் வெளி – ஆன்ம தத்துவம் 2 கலை வெளி  - வித்தியா தத்துவம் 3 சுத்த  நல்வெளி – சிவ தத்துவம் இவைகளில் இந்த  ஐந்து பரிமாணமும் அடக்கம் விவரிக்கில் – ஆன்ம தத்துவம் அடங்கிய உயிர் வெளியில்  – முதல் 3 பரிமாணம் அடங்கும் வித்தியா - சிவ தத்துவம் அடங்கிய கலை சுத்த நல் வெளிகளில்  4/5 பரிமாணம் அடங்கும்     3 இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய் அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய் அமர்ந்தபெரு வெளியாகி  பர வெளி  சிற்பர வெளி  தற்பரவெளி பெருவெளி  மேற்கூறிய யாவுமே ஆன்ம நிலை குறிக்க வந்த வெளிகள் – 6/7/8 பரிமாணம் எனலாம் Realms of Brahman – Atman – SELF Soul    துவாத சாந்தப்பெருவெளி தான் இதன் தத்துவ வெளி விளக்கம் பெயர்    4 அருள் இன்ப வெளி – திருச்சிற்றம்பல வெளி – இறுதி எல்லை வெளி  9/10 பரிமாணம்  எனலாம் பொன்னம்பல சிற்றம்பல சுகாதீத பெருவெளிகள் ஆகும்  Realms of Nataraj – King of Dance       வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.