Thursday, March 5, 2026

ஓளி தேக சித்தி – மரணமிலாப் பெரு வாழ்வு -  சாகாக்கல்வி சித்திக்க எத்தனை யோகம் பயில வேணும் ??

ஓளி தேக சித்தி – மரணமிலாப் பெரு வாழ்வு -  சாகாக்கல்வி சித்திக்க எத்தனை யோகம் பயில வேணும் ?? பலப்பல ஆற்றி அனுபவம் கிட்டி மேலேறணும் 1 வாசி யோகம் 2 சந்திர யோகம் 3 ஹட யோகம் 4 பரியங்க யோகம் 5 சிவ யோகம் இதை எல்லாம் ஆற்றினாலும் , அதுக்கும் மேலே சில பல அனுபவம் விளக்கம் 1 ஒருமை 2 ஜீவகாருண்ணியம் 3 எட்டிரெண்டு 4 சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் 5 உயிர் -  அருள் - சுத்த சிவ அனுபவம் 6  சைவ சித்தாந்தம் – 36 தத்துவம் – அதன் நிக்கிரகம் 7 கோள்கள்  8 ஜோதிடம் 9 மருத்துவம்  - மூலிகை 10  வெளிகள்  விளக்கம் 11 அவத்தை நிலைகள் 12 பக்ஷ பேதம் 13 அண்டம் உலகம் – தத்துவ 14 சூக்கும உடல்  -  காரண உடல் இதிலெல்லாம் கற்றுத்தேர்ந்து வித்தகம் பெற்றிருந்தால் தான் சாகாக்கல்வியில் வெல்ல முடியும் சித்தி அனுபவம் ஆகும் இதெலாம் முடிக்க எத்தனை காலம் ஆகும் ?? வாசி முடிக்கவே ஒரு பிறவி போதவிலை இதெல்லாம் முடிக்க பலப்பல பிறவிகள் ஆகும் சாகாக்கல்வி சும்மா இல்லை  நம்மை ஒரு வழி செஞ்சி தான் சக்கை ஆக்கி சாறாக பிழி ஞ்சி தான் கையில் அந்த மாபெரும் வரம் அளிக்கும் நாம் வள்ளல் பெருமானின் அனுபவ வரிகள் நினைவில் வைத்துக்கொள்ளல் நலம்  அருட்பா - ஆறாம் திருமுறை  - மெய்யருள் வியப்பு 1 பனிரெண்டாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே படியில் பட்ட பாட்டை நினைக்கில் " மலையும் கரையுமே" 2. ஈராறாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே எளியேன் பட்ட பாட்டை  நினைக்கில் " இரும்பும்  கரையுமே" வள்ளல் பெருமான்  தன் 12 வயதில் சாதனம் ஆரம்பித்து எப்போது முடித்தார் என்பது  உறுதியாக தெரியவில்லை -   அவர்  பட்ட கஷ்டங்கள் - துயரங்கள் எல்லாம் மேலுள்ள பாக்கள் உறுதி செய்கின்றன வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.