Wednesday, March 4, 2026

எழுவார் மேடையும் வைணவ நாமமும் “

எழுவார் மேடையும் வைணவ நாமமும் “ சத்திய ஞான சபை அமைப்பை நன்கு ஆய்ந்தால் அதன் உண்மை உள்ளது படி அறிந்து கொண்டால் ஞானம் சாகாக்கல்வி எல்லாம் அத்துபடி தான் ஆனால் நம் அன்பர் ரெண்டு பிடித்துக்கொண்டு அலைகிறார் 1 ஜீவகாருண்ணியம் – சோறு போடுதல் 2 தயவு எழுவார் மேடை தென் கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கு அது விந்துகலை மேலேழுப்பத் தான் இந்த ஏற்பாடு அதனுடன் சிலபல வஸ்துக்கள் மேலேற வைக்கணும் என்னென்ன என்பது ரகசியம் – குரு விளக்குவார் அதுக்குத் தான் பேர் “ எழுவார் “ மேடை மேல் எழுப்புதல் கிளப்புதல் என்ற பொருள்பட அதுக்காகத் தான் சன்மார்க்க கொடி பீடம் கூட இதே அர்த்தத்தில் தான் வைணவ சம்பிரதாயத்தில் நாமம் இடுதலும் அது விந்து கலை சுழி வாசல் புருவ மையத்தில் இருந்து மேல் ஏற்றுதல் குறிப்பது ஆம் ரெண்டுமே ஒரே அனுபவம் குறிப்பது தான் ஆய்வு செயணும் தெளிவு அடையணும் பயிற்சி செயணும் அனுபவம் அடையணும் பின் எப்படி சமயமதம் பொய்யானது ?? எல்லா விஷயமும் அனுபவமும் அங்கேயும் இருக்கு ?? ஆனால் சடங்காக அவ்வளவு தான் அதன் பொருளடக்கம் தெரியாமலே பக்தர் செய்கிறார் பதர் ஆக இருக்கின்றார்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.