Wednesday, March 4, 2026

அகத்தியர் -உச்சி பெருமை

அகத்தியர் -உச்சி பெருமை மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே விளக்கம் : மேலோட்டமாக பார்த்தால் , மனதை வளப்படுத்தினால் ?? பக்குவப்படுத்தினால் போதும் மந்திரம் /வாசி தேவையிலை போலத் தெரியும் ஆனால் இதன் உட்பொருள் : செம்மை = சக்தி விளங்கும் அண்ணாமலை/ பிரமரந்திரம் அங்கு ஏறாத நிலை மேல் நம் உணர்வு ஏறிய பிறகு தான் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் வாசி உயர்த்த வேண்டாம் அது வரை ?? இந்த அனுபவம் சித்திக்க , வாசி துணை இல்லாமல் நடக்காது ஆகையால் தவம் தேவை ஆகையால் நேரடியான பொருள் எடுக்கக் கூடாது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.