Wednesday, March 4, 2026

சுத்த சிவாகார பூர்ணஸ்தம்பம் – பிராணன் தொடர்ப

சுத்த சிவாகார பூர்ணஸ்தம்பம் – பிராணன் தொடர்பு உரை நடை : மேலும் பிரமஸ்தானந் தொடங்கிச் சுத்தசிவஸ்தானம் வரையில் ஒரு ஸ்தம்பம், இருதயம் வரையில் வாயு வண்ணமாயும் அதற்கு மேல் அக்கினி வண்ணமாயும் இருக்கும். இது அடியிற் பருத்து வர வர நேர்மையாய், இந்திரிய கரணங்களுக்குப் புலப்படாமல் அணுவுக்கணுவாய், ஜீவனுக்கும் புலப்படாமல் அகண்டமாய், ஆன்மக்காட்சியில் அருகித் தோன்றுவதாய், இரண்டற நிற்கும். இதற்குச் சிவாகார பூரண ஸ்தம்பம் என்று பெயர். சைவமும் சைவ சித்தாந்தமும் : பிராணன் = அக்கினி பிரகாசத்துடன் கூடிய வாயு என விளக்கம் அளிக்குது பிராணன் ஆகிய வாசி / வேகாக்கால் மேலேறும் நாடியானது கூட தனக்கேற்ற மாதிரியாக வாயு அக்கினி வண்ணமாக இருக்கு இதுக்கு மேல் விளக்கம் இங்கே கூறினாலும் , மக்களுக்கு விளங்காது நேரில் கற்கும் போது புரியும் சைவமும் சன்மார்க்கமும் ஒரே கருத்தைத் தான் சொல்லுது

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.