Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 14, 2026
வள்ளல் பெருமானின் ஒளி தேக சித்தி
வள்ளல் பெருமானின் ஒளி தேக சித்தி
அருள் வெளி இருந்து இறங்கு
செம்பொன் ஒளி + வெண்சிகப்பு ஒளி உடலை தெய்வீகமாக்கும்
இது அன்னமய கோசம் உடலை குறிப்பது ஆம்
இதை நிரூபிக்கும் அருட்பா வரிகள்
" பிரசாத மாலை "
1. திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து
திருநீற்றுப் பைஅவிழ்த்துச் “ செஞ்சுடர்ப்பூ “ அளிக்கத்
தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும்
தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப
மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு
மகிழ்ந்தளித்தாய் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய்
குருஉருக்கொண் டம்பலத்மே அருள்நடனம் புரியும்
குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே
2 . என்வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே
என்முன்அடைந் தெனைநோக்கி ஔநகைசெய் தருளித்
தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பைஅவிழ்த் தெனக்குத்
தகு “ சுடர்ப்பூ “ அளிக்கவும்நான் தான்வாங்கிக் களித்து
மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல்
வேண்டுமென முன்னரது விரும்பியளித் தனம்நாம்
உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய்
ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே.
3. அழகுநிறைந் திலஒரு திருமேனி தரித்தே
அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார்
கழகநடு எனைஇருத்தி அவர்க்கெல்லாம் நீறு
களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து
குழகியற்” செஞ் சுடர்ப்பூவைப் “ பொக்கணத்தில் எடுத்துக்
கொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே
மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி
மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே
இந்த மாதிரி 10 பாக்கள் பாடியுளார்
அதாவது அபெஜோதி ஆண்டவர் தன் உடலை ஒளி மயமாக மாற்றப்போகிறார் என்பதை தனக்கு சூசகமாக இந்த செஞ்சுடர்ப்பூ அளித்து தெரிவித்ததாக பாடுகிறார்
செஞ்சுடர்ப்பூ அதன் ஒளி உடலை ஒளி மயமாக்கும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.