Friday, March 13, 2026

அபர வித்தைகள்

அபர வித்தைகள் எவை எவை எனில் ?? வள்ளல் பெருமான் எது கூறினாலும் , முதலில் பிரிப்பது 1 சுத்தம் அசுத்தம் 2 பரம் அபரம் பரத்துக்கு எதிரானது அபர வித்தைகள் 1 லம்பிகா முத்திரை /யோகம் நாக்கை மடித்து உள் வைத்து , வாசி உருவாக்கும் குறுக்கு பயிற்சி இதை கேசரி யோகம் என பலர் கற்றுத்தருகிறார் வாசியை இயல்பாக உருவாக்கணும் – குறுக்கு வழியிலல்ல 2 முப்பு – அமுரி – கல்பம் உப்பு வைத்து அதன் பேதங்களாக புறத்தில் வைத்தியம் செய்து கொள்வது இது உடலை நீட்டிக்குமே அல்லாது ஞானத்தை அளிக்காது ஏனைய அபர சுகம் அளிக்கும் மைனர் மாதிரி இருக்கலாம் அருட்பா உரை நடை படிக்கவும் பிரபஞ்ச பேராற்றல் – நல்ல மருந்து / ஞான மருந்து கொண்டு கல்பம் செய வேணும் 3 தந்த்ரா - பெண் கொண்டு செயும் பரியங்கம் பரியங்கம் என்பது தனக்குளே ( அக ) செய வேண்டிய பயிற்சியே அன்றி , புற இன்பமே கேளிக்கையோ அல்ல இதை இவ்வாறு புறமாக மாத்தியவர் ஓஷோ அதனால் அவர்க்கு ஏகப்பட்ட சீடர்கள் மாணாக்கர் 4 ஸ்ரீ வித்தை பெண்ணை வைத்து செயும் பயிற்சி அக பயிற்சி தான் சரி 5 திராதகம் இது மாதிரி நிறைய நிறைய இருக்கு நாம் தான் கவனமாக இருக்கோணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.