Saturday, March 14, 2026

வள்ளல் பெருமானுக்கு திரு ஞான சம்பந்தர் செய்த பர உதவிகள்

வள்ளல் பெருமானுக்கு திரு ஞான சம்பந்தர் செய்த பர உதவிகள் ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை திருச்சிற்றம்பலம் 1 அடியெனல் எதுவோ முடியெனல் எனாதுவோ அருட்சிவ மதற்கெனப் பலகால் படியுற வருந்தி இருந்தஎன் வருத்தம் பார்த்தரு ளால்எழுந் தருளி மிடியற எனைத்தான் கடைக்கணித் துனக்குள் விளங்குவ அடிமுடி என்றாய் வடிவிலாக் கருணை வாரியே மூன்று வயதினில் அருள்பெற்ற மணியே. 2 வருபகற் கற்பம் பலமுயன் றாலும் வரலருந் திறனெலாம் எனக்கே ஒருபகற் பொழுதில் உறஅளித் தனைநின் உறுபெருங் கருணைஎன் உரைப்பேன் பெருமண நல்லூர்த் திருமணங் காணப் பெற்றவர் தமையெலாம் ஞான உருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த உயர்தனிக் கவுணிய மணியே. விளக்கம் : 1 வள்ளல் பெருமானுக்கு திரு ஞான சம்பந்தர் செய்த பர உதவிகள் பத்தி பாடுகிறார் நான் அடி எது முடி எது என திகைத்து நின்ற போது , மூன்று வயதில் ஞானப்பால் அருந்திய ஞான சம்பந்தப் பெருமானே கருணைக் கடலே என் வருத்தம் பொறுக்காமல் எனக்கு அதை விளக்கிய அருள் மணியே என புகழ்ந்து பாடுகிறார் 2 பின்னும் தவத்தில் பல கற்ப காலம் தவம் இயற்றினாலும் வருவதுக்கு அரிதான அனுபவம் என் தனக்கே ஒரு பொழுதில் சுழி உச்சியில் காட்டிய நின் கருணை என்னவென உரைப்பன் நல்லூர் பெருமணத்தில் தானும் எல்லவரையும் சிவத்தில் கரைத்த கருணை உடை மணியே ஞான சம்பந்தப்பெருமானே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.