Saturday, March 14, 2026

ஆன்மா வல்லமை - பிறவி அம்சங்களைத் தானே முடிவெடுத்தல்

ஆன்மா வல்லமை - பிறவி அம்சங்களைத் தானே முடிவெடுத்தல் அருட்பா உரை நடை -- திருவருட்பிரகாச வள்ளலார் கலை அறிவும் அருள் அறிவும் பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம். சூல்வண்டி ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலைஅறிவை, ஒருவன் அருள்முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம். இந்த காரணத்தினால் தான், ஒரு ஜீவன் பரிணாமத்தில் வளர்ச்சி காண பல கோடி பிறவிகள் ஆகுது என்ற மாபெரும் உண்மை அறிந்து கொள்ளலாம் ஞான படிகளில் மேலேறுவது மிக மிக கடினம் அனுபவம் வருவது அபூர்வம் ஆதாரம் : வள்ளலார் அருளிய ஆளுடைய பிள்ளையார் அருள் மாலை பாடல் வரிகள் – திரு ஞான சம்பந்தர் மீது பாடியது வருபகற் கற்பம் பலமுயன் றாலும் வரலருந் திறனெலாம் எனக்கே ஒருபகற் பொழுதில் உறஅளித் தனைநின் உறுபெருங் கருணைஎன் உரைப்பேன் பெருமண நல்லூர்த் திருமணங் காணப் பெற்றவர் தமையெலாம் ஞான உருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த உயர்தனிக் கவுணிய மணியே. இதுக்கு காரணம் : ஜீவனின் தேக இந்திரிய கரணம் காலம் எல்லாவற்றையும் 36 தத்துவம் நிர்ணயிப்பதால் வருவன ஆகும் இதன் மூலம் படி ஏறினால் அது மிக மெல்ல மெல்ல நடக்கும் – மாட்டு வண்டி மூலம் பயணம் மாதிரியாக இதுக்காகத்தான் வள்ளலார் வேகமாக படிகள் ஏற வேண்டும் என்பார் சரி ? எப்படி ஏறுவது ?? இந்த கட்டுப்பாடு நிர்ணயம் எல்லாம் 36 தத்துவத்தில் இருந்து மாறி ஆன்மாவிடம் கைமாறினால் இந்த பயணம் ஜெட் வேகத்தில் நடக்கும் எப்படி எனில் ?? அப்போது , ஆன்மாவானது பிறவிக்கான உடல் காலம் கருவி கரணம் ஆயுள் சுக போகம் எல்லா அம்சத்தையும் தானே முடிவு செய்து , ஜீவன் வளர்ச்சியும் தன் ஆன்ம வளர்ச்சியும் காணச் செயும் இது உரை நடை பக்ஷ பேதத்தில் வரும் ஞான உபதேசம் – படித்து தெரிந்து கொள்ளலாம் நம் பிறவி கடிவாளம் கைமாற வேண்டும்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.