Friday, March 6, 2026

இதிகாச புராணங்கள் - பெருமையும் முக்கியத்துவமும்

இதிகாச புராணங்கள் - பெருமையும் முக்கியத்துவமும் நம் இதிகாச புராணங்கள் யாவும் வேத ரிஷிகளின் அனுபவங்கள் ஆகும் - முதலில் அது எழுதப்பட்டு , பின்னர் அது நடந்து இருக்கலாம் - நடவாமலும் போயிருக்கலாம் 1 திருவிளையாடற்புராணம் - இதில் 64 திருவிளையாடல் - மாணிக்க வாசகர் வரலாறு இருக்கின்றது வாசி எப்படி உண்டாக்குவது ?? மூலக்கனல் - மூலாக்கினி எப்படி உண்டாக்குவது ?? என்று விளக்கப்பட்டிருக்கின்றது 64 திருவிளையாடல் - மாணிக்க வாசகர் வரலாறு - இதன் உட்பொருள் அறிந்தால் பல சித்திகள் பெறலாம் - ஆன்ம அனுபவம் - ஆன்ம தரிசனம் கிடைக்கும் 2 மகாபாரதம் - இதில் எப்படி ஆன்மா துணையுடன் பஞ்ச இந்திரியங்கள் எல்லா இருள் குணங்களையும் வெல்கின்றது என்று விளக்கப்பட்டிருக்கின்றது இதில் 1உடலை எப்படி காய கல்பம் செய்வது என்பதனை காந்தாரி சொல்லித் தருவாள்?? 2 எப்படி உடலை நம் சொல்படி இயங்க வைப்பது என்று சொல்லித்தரும் ?? 3 இராமாயணம் இதில் எப்படி மனதை வென்று ஆன்மா ஆட்சிக்கு வருகின்றது என்று விளக்கப்பட்டிருக்கின்றது ?? 4 கந்த புராணம் எப்படி ஆன்மா மும்மலங்களை வெல்கின்றது என்று விளக்கப்பட்டிருக்கின்றது ?? எல்லா இதிகாச புராணங்களில் ஆன்மா அனுபவத்துக்கும் தரிசனத்துக்கும் வழி விளக்கப்பட்டிருக்கின்றது என்ன நாம் அதன் உட்பொருளை கண்டு பிடிக்க வேண்டும் - யாரும் அதை செய்வதில்லை நம் சம காலத்து பகவான்கள், சத்குருக்கள், தத்துவ ஞானிகள் இதன் உட்பொருளை கண்டு பிடிக்காததால், அவர்கள் ஆன்ம அனுபவம் பெறாமலே போய்விட்டார்கள் - செயற்கரிய செயலை செய்யாமல் - பெறுதற்கரிய பேற்றினை பெறாமலே போய்விட்டார்கள் மேலும் இவர்கள் கண்மணி - கருவிழியின் பெருமையினை அறியாமல் போனதால் திருவடி - ஆன்ம அனுபவம் பெறவில்லை கண்மணி - கருவிழியின் பெருமையினை அறிந்து இருந்ததால் சித்தர் பெருமக்கள் பல சித்திகள் - ஆன்ம அனுபவம் பெற்று சமாதி அடைந்தனர் என்பது உண்மை Hence decode all epics and puraanas - you will become Atman and soul - its for sure வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.