Friday, March 6, 2026

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் BG Venkatesh / April 1, 2015 திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் அதிகாரம் – புலால் மறுத்தல் குறள் : கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி எல்லா உயிரும் தொழும் சாதாராண விளக்கம் : புலால் உண்ணாதவனையும் , பிற உயிர்களைக் கொல்லாதவனையும் உலகிலுள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும் சன்மார்க்க விளக்கம் : 1 எவன் ஒருவன் தன் உயிரை கொல்லா நெறிக்கு – மரணமிலாப் பெரு நெறிக்கு தக்க சாதனைகள் மூலம் அழைத்துச் செல்கின்றானோ, 2. எவன் ஒருவன் ” விந்து ஜெயத்தை ” மேற்கொண்டு அதில் வெற்றி கண்டு , அதன் மூலம் உயிர்களை கொல்லாமல் இருக்கின்றானோ ( பரியங்க யோகம் மூலம் ( அ) பிற பல யோகங்கள் மூலம் இதனை நடைப்படுத்துகின்றானோ ) அவனை உலகிலுள்ள எல்லா உயிரகளும் கைகூப்பி வணங்கும் உதாரணம் : மாணிக்க வாசகரை கொல்ல ஏவப்பட்ட யானை – அவரை கொல்லாமல் , அவரை வணங்கி தொழுதுச் சென்றது – அவர் மேற்கூறிய ஒழுக்க நெறிகளில் நின்றிருந்தார். வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.