Saturday, March 14, 2026

தெய்வமும் ஆயுதமும் “

தெய்வமும் ஆயுதமும் “ உண்மை சம்பவம் Jan 2023 சென்ற மாதம் நான் சென்னை வந்திருந்த போது ஒரு அன்பருடன் நடந்த உரையாடல் அவரிடம் நான் திருவாசகம் சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை பெருமை பேசிக்கொண்டிருந்தேன் அதில் இல்லா வித்தை / விளக்கமே இலை எனவும் கூறினேன் எனக்கு வரும் விஷனுக்கும் விளக்கம் அதில் இருந்து தான் எடுப்பேன் என்றேன் ஒரு சமயம் - கண்ணனின் அண்ணன் பலராமர் என் விஷனில் கலப்பையுடன் வந்தார் எனக்கு புரியவிலை நான் திருவாசகம் உரை பார்த்தேன் அதில் கலப்பை கொண்டு சுழிமுனை வாசல் திறக்கவேணும் என்றிருந்ததைப் படித்து அதிர்ந்து விட்டேன் அவரும் : ஆமாம் – உண்மை தான் வாராகி அம்மன் கையிலும் கலப்பை ஆயுதம் இருக்கு இதை தான் சமயபுரம் கோவில் கோபுரத்தில் கண்டதாக கூறினார் ஏன் ?? இவ்வாறு அமைத்துள்ளனர் கலப்பை பூமி உழும் எந்திரம் வாராகி – பன்றி முகம் பன்றி நிலத்தை பிளந்து செல்லும் விலங்கு ஆக ரெண்டும் ஒன்றாய்ப்போனது ஆகையால் , யோகத்துக்கு வேண்டிய அனுபவத்துக்கு வர கலப்பை அவசியம் நிலம் ஆகிய மூலத்தை பிளக்க ஆழ்ந்து செல்ல , ஒரு பயிற்சி இருக்கு நிலம் எனும் மூலத்தில் இருந்து தான் வாசி உருவாகுது அதை உருவகப்படுத்த தெய்வமாக – வாராகி அம்மனும் , ஆயுதமாக கலப்பையும் உண்டாக்கி , அதை அம்மன் கையில் ஏற்றிவிட்டனர் நம் முன்னோர் வாசி உருவாக்க விரும்புவோர் / பயிற்சி செய்வோர் வணங்க வேண்டிய தெய்வம் வாராகி அம்மன் என இதன் மூலம் தெளிவாகுது இனி என்னிடம் பயிற்சி கற்போரிடம் வாராகி அம்மனை வணங்கவும் என ஆலோசனை வழங்குவேன் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.