இதுவும் அதுவும் ஒன்று தான்
நேரடி பொருள் எடுக்கக் கூடாத பாடல்
1 அகத்தியர் -உச்சி பெருமை
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே
விளக்கம் :
மேலோட்டமாக பார்த்தால் , மனதை வளப்படுத்தினால் ?? பக்குவப்படுத்தினால் போதும்
மந்திரம் /வாசி தேவையிலை போலத் தெரியும்
ஆனால் இதன் உட்பொருள் :
செம்மை = சக்தி விளங்கும் அண்ணாமலை/ பிரமரந்திரம்
அங்கு ஏறாத நிலை மேல் நம் உணர்வு ஏறிய பிறகு தான்
மந்திரம் ஜெபிக்க வேண்டாம்
வாசி உயர்த்த வேண்டாம்
அது வரை ??
இந்த அனுபவம் சித்திக்க , வாசி துணை இல்லாமல் நடக்காது
ஆகையால் நேரடியான பொருள் எடுக்கக் கூடாது
2 திருவாசகம் – திருப்படையாட்சி – 1
கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே.
பொருள் :
மேலோட்டமாக பார்த்தால் மேற்கூறியவற்றை செயத்தேவையிலை போல் காட்டும்
ஆனால் கடைசியில் மாறிடும்
5 இந்திரிய சக்திகளையும் – அஞ்ஞான தத்துவங்களும் ஆகிய மீன்களை சிவம் ஆகிய வலைஞன் தன் ஒளி ஆகிய வலை வீசி பிடிக்க வெளிப்பட்டால்
என்னவெல்லாம் நிகழும் ?? என விவரிக்கின்றார் மணிவாசகப்பெருமான்
1 கண்கள் அவன் திருவடிகள் காண வேண்டியதிலை
2 பெண்கள் தொடர்பு நம் வாழ்வில் இல்லாமல் போய்விடும்
3 இந்த உலகில் பிறப்பற்றுப்போய்விடும்
4 மாலறியா திருவடியை வணங்க வேண்டியதிலை
5 பாடல் ஆடல் களி ஆட்டம் இல்லை
6 சிவத்தினுடைய படைகள் போற்றுதலும் இலை
7 இன்பம் அளிக்கும் விண் பொருள் வெளிப்படுதலும் இலை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.