Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
ததீசி மகரிஷி - மும்மல நாசம் – ஒளி தேக சித்த
ததீசி மகரிஷி - மும்மல நாசம் – ஒளி தேக சித்தி
புராணம் :
இந்த மகரிஷி தன் தவ வலிமையால் தன் உடலின் எலும்பை வஜ்ரம் போல் மாற்றி அமைத்து வைத்திருந்ததாகவும் , அதை வைத்து தான் இந்திரன் , விருத்திகாசரன் எனும் அசுரனை வதைக்க , ஆயுதமாக மாற்றி அவனை கொன்றதாக புராணம் உரைக்குது
இதன் உட்பொருள் :
நான் பலமுறை கூறியுளேன் , தவத்தில் எலும்பை பயன்படுத்த வேணும்
அப்போது மக்கள் நகைத்தனர் கேலி செய்தார்
இதை உறுதி செயும் மற்றுமொரு உதாரணம்
விருத்திகாசுரன் – மும்மலம்
எலும்பு / வஜ்ரம் – எலும்பில் இருக்கும் மஜ்ஜை -
அதாவது விந்து சக்தியாகிய மஜ்ஜை கொண்டு மும்மலத்தை நாசம் செய வேண்டும் என்றும்
விந்துவை ஒளியாக மாற்றி மும்மலத்தை நாசமாக்க வேணும் என்றவாறு
அதனால் தான் ஒளி தேகமும் கிட்டும் என்றும் ,
வினைகளும் முற்றிலும் நாசமாகும்
இது பகீரதன் புராணம் மூலமாக நிரூபிக்கப்பட்டுளது
புராணம் எலாம் யோக ஞான அனுபவமே அன்றி , வெறும் கதை அல்ல , இரவில் நம் பேரன் பேத்தியர்க்கு கூறி தூங்க வைக்க
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.