Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
தவம் தன்மை அரும
தவம் தன்மை அருமை
அருட்பா – நான்காம் திருமுறை
ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை
வருபகற் கற்பம் பலமுயன் றாலும் வரலருந் திறனெலாம் எனக்கே
ஒருபகற் பொழுதில் உறஅளித் தனைநின் உறுபெருங் கருணைஎன் உரைப்பேன்
பெருமண நல்லூர்த் திருமணங் காணப் பெற்றவர் தமையெலாம் ஞான
உருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த உயர்தனிக் கவுணிய மணியே
அதாவது தவத்தில் பலப்பல கற்பகாலம் முயன்றாலுமே வரல் அரிதாகும் அனுபவம் எல்லாமே ஒரு பொழுதில் அடைந்திடச் செய்தாராம் திரு ஞான சம்பந்தர்
ஆருக்கு ??
வள்ளல் பெருமானுக்கு
ஆகையால் தவம் என்பது ஆற்றுவது அரிது
அதிலும் அனுபவம் பெறல் அரிதிலும் அரிது என்று அறிய வேணும்
நம் சன்மார்க்க அன்பர் திரு ஞான சம்பந்தரை மதிப்பதே இல்லை
வள்ளல் பெருமானின் குரு என்பது அவர்க்கு தெரியாது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.